Header Ads



விமல் அணியின், முக்கிய விக்கெட் வீழ்ந்தது

-Dc-

கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உபதலைவரும். பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராகிவருகிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படவேண்டியது ஏன்? என்பது தொடர்பில் 8 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

அதேவேளை தான் உபதலைவராக உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

தற்போது மஹிந்த அணியினர் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றால் வெற்றி பெற முடியாது. ஆனால் இரண்டு தரப்பும் ஒன்றிணையக் கூடாது என்ற நிலைப்பாடே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிடம் உள்ளது. இதற்கு மாறான நிலைப்பாட்டை உடையவராக தாம் இருப்பதாக வீரகுமார திஸாநாயக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.