Header Ads



இலங்கை முஸ்லிம் சகோதரரினால் கோலி, ஷர்மாவின் உதவி நிராகரிப்பு


இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு வழங்கும் ஆதரவாளர் ஒருவருக்கு இந்திய துடுப்பாட்ட வீரர் உதவிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கயான் சேனாநாயக்க மற்றும் மொஹமட் நிஸாம் என்பவர்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ஆதரவாளர்களாகும். குறித்த இருவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்குவதற்காக சென்றுள்ளனர்.

எனினும் புதுடில்லியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மொஹமட் நிஸாமின் தந்தை நோய்வாய்ப்பட்டுள்ளார். அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவராகும். அதற்கமைய நிஸாம் மீண்டும் இலங்கைக்கு வர வேண்டிய அவசியம் காணப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கான டிசம்பர் மாதம் 26ஆம் திகதியே டிக்கட் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு அவசியமான டிக்கட் பெற்றுக் கொள்வதற்கு போதுமான பணம் இருக்கவில்லை.

இதனை அறிந்து கொண்ட இந்திய ஆதரவாளரான சுதீர் கௌதம், நிஸாமின் பிரச்சினை தொடர்பில் ரோஹித் ஷர்மாவிடம் அறிவித்துள்ளார். அதன் ஊடாக கொழும்பிற்கு செல்வதற்கு தேவைாயன விமான டிக்கட்டுக்கு தேவையான 20000 ரூபாவை, ரோஹித் ஷர்மா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நிஸாமின் தந்தைக்கான மருத்துவ செலவு மற்றும் சத்திரசிகிச்சை செலவினை ஏற்பதற்கும் ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் முன்வந்துள்ளனர் எனினும் அதனை நிஸாம் நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. இவ்வாறான மனித நேயங்களுக்கு பல சல்யூட்கள்...

    ReplyDelete
  2. Strange father is suffering from cancer, son is going to India to watch cricket, then begging money from others.

    ReplyDelete
  3. Good human quality.Sportsmen bring joy,happiness and do humanitarian work whenever it is needed.But corrupt politicians plundering the national wealth and wait for national disasters to occur to do business with the money(aid).

    So sportsmen deserve more respect than corrupt politicians.Salute for your good gesture.

    ReplyDelete

Powered by Blogger.