Header Ads



டன் பிரசாத், வெளியே வந்தான் (யாரும் காணாத பகுதிக்கு, செல்லப் போகிறானாம்)

அப்பாவி ரோஹின்ய முஸ்லிம்கள் மீது தனது வீரத்தை காண்பித்ததுடன் பிணை நிபந்தனைகளையும் மீறிய அடிப்படையிலும் 60 க்கும் மேற்பட்ட நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த டன் பிரசாத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான்.

இதுதொடர்பிலான வழக்கு கல்கிஸ்ஸ - மவுன்லேவன்னியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி மொஹமட்டினால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் டன் பிரசாத்தின் சட்டத்தரணி பேசாத நிலையில் டன் பிரசாத்தே தனக்காக வாதாடியுள்ளான்.

இங்கு நீதிபதி முன் 2 கைகளையும் உயர்த்தி, கும்பிட்டு, மன்னிப்பு கேட்ட, டன் பிரசாத்,

நான் வீடியோ வெளியிட மாட்டேன், குரல் பதிவு செய்து அதனை சமூக ஊடகங்களில் பகிரமாட்டேன், யாரும் அறியாத வகையில் எனது வீட்டை மாற்றிக்கொண்டு, யாரும் காணாத பகுதிக்கு சென்று விடுகிறேன்.

தயவுசெய்து என்ன மன்னித்து விடுதலை செய்து விடுங்கள், என நீதிபதியிடம் மன்றாடியுள்ளதுடன் நான் சட்டத்தை மீறி ஏதாவது பேசினால் என்னை பிடித்து,  மீண்டும் சிறையில் அடையுங்கள் என குறிப்பிட்டுள்ளான்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள சார்பிலான சட்டத்தரணிகள் டன் பிரசாத்தை விடுதலை செய்ய தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் நீதிபதி மொஹமட் டன் பிரசாத்தை விடுதலை செய்துள்ளார். www.jaffnamuslim.com

2 comments:

  1. கோடாரிக்கம்புகள் இருக்கும் வரை மரங்களுக்கு பாதிப்புதான்

    ReplyDelete
  2. he is out on bail. but case is on going. due punishment is waiting.

    ReplyDelete

Powered by Blogger.