Header Ads



சவூதியில் உள்ள, இலங்கையர்கள் அச்சமடைந்துள்ளனரா..?

சவூதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் அச்சமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யேமனின் ஹயுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக சவூதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை சவூதி வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது.

குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி மற்றும் இந்த மாதம் 19ம் திகதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் வானிலேயே வைத்து முறியடிக்கப்பட்டிருந்தது.

எனினும் அடிக்கடி இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் இந்த ஆபத்தினை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சவூதி அரேபியாவில் சுமார் 190000 இலங்கையர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அந்நாட்டு மற்றும் இலங்கை அதிகாரிகளின் கடமையாகும் என சவூதி வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19ம் திகதி ரியாத் நகர் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் பாரிய வெடிச் சத்தத்துடன் வானில் வெளிச்சம் தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமோ சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகமோ இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. கட்டார்க்கு போகலாமே?
    ஏன் இலங்கையில் LTT பிரச்சனையில் குண்டு ஒன்றும் வெடிக்கவில்லையோ????
    எம் நாட்டவர் ஏதோ சுவர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்களா??????

    ReplyDelete
  2. False voice .
    LTTE problem and this is totally difference..in Time of bombs and disaster Saudi will never look after Asians and they are racists ..they will only look after white and Saudi national first .
    If it is Sri Lanka it will be the first one.
    So there is a reason to fear due to stupidity of Saudi and Yemen war.
    Wait and see how war is progressing.
    Is it end of Saudi royal family..
    You may go to Sauid to fight the houthis.

    ReplyDelete
  3. Srilanka, who lives in Saudi are keeping fine and have no worry by this event. if to worry...all around the world issues are going around. Even inside Srilanka how many incident ?

    Just some body wanted to write and article for the sake of filling the space.... These days writers write what they think.. but not what people really in a situation.

    Alhamdulillah.

    ReplyDelete

Powered by Blogger.