Header Ads



எம்மைத் திட்டுவதில் அர்த்தமில்லை - நாமல்

“கூட்டு எதிரணியில் உள்ள சிரேஷ்ட தலைவர்கள் தான் சொல்வதை கேட்கிறார்கள் என்று கூறுவது நகைச்சுவையாக இருப்பதாக“ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணிக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலை குழப்பியது நாமல் மற்றும் பிரசன்ன ரணதுங்க என அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே நாமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

“அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டு எதிரணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைவதுக்கு தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்கின்றேன்.அமைச்சர் தயாசிறி தன்மீது குற்றச்சாட்டை சுமத்தினாலும் குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட போது தான் பொலன்னறுவையில் இருந்தாகவும் தமக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் எவ்வித பிரச்சனையும் இல்லை.

ஆனால் அமைச்சர் தயாசிறிக்கு அமைச்சப் பதவியை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை.அவர்களது அமைச்சுப் பதவியைப் பாதுகாத்துக் கொள்வதுக்காக ​எம்மைத் திட்டுவதில் அர்த்தமில்லை.நாம் சொல்வது அமைச்சுப் பதவியை விட்டு வாருங்கள் அரசாங்கத்தை அமைக்கலாம்” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “கூட்டுஎதிரணியில் சிரேஷ்ட தலைவர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்கள் நாமல் சொல்வதை கேட்கிறார்கள் என்பது நகைப்புக்குரியது.அதிலும் 50 வருட அரசியல் வரலாற்றைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ 30 வயதான நாமலில் பேச்சைக் கேட்கிறார் என்பது தவறான ஒன்றாகும்.


எனவே தான் தனிப்பட்ட ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிரானவன் ஏனெனில் இரண்டு கால்களை இரண்டு பக்கங்களுக்கு வைக்க முடியாது“என அவர் ​குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.