Header Ads



“பேச்சு போதும் - வேலையை ஆரம்பிப்போம்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் மஹிந்தவின் புதல்வர்களின் தலைமையில் நடைபெறுவதால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வருத்தத்தில் உள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்லை நெழும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார முன்னாயத்த நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் மஹிந்தவின் புதல்வரான ரோஹித ராஜபக்ச மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

“பேச்சு போதும் - வேலையை ஆரம்பிப்போம்” என்ற தலைப்பில் அந்த பிரச்சார மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மஹிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவினால் இந்த பிரச்சார நடவடிக்கை “ட்ரை எட்” உட்பட நாட்டின் பிரதான பிரச்சார நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு ரோஹித ராஜபக்ச தலையிட்டிருப்பதும், மஹிந்த ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்சவின் தீர்மானத்திற்கு விருப்பம் தெரிவித்திருப்பதும் பசில் ராஜபக்சவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015 தேர்தல் பிரச்சாரங்களை கெடுத்ததும் மஹிந்தவின் புதல்வர்கள் தான் எனவும், இந்த முறையும் கெடுப்பதற்கே நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பசில் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. முதல்ல இவன் அனுப்பின satellite எங்க ? கண்டு பிடிக்க சொல்லுங்க.

    தேர்தல் எல்லாம் அப்புரம் பார்ப்போம்

    ReplyDelete

Powered by Blogger.