Header Ads



மைத்திரியை நோக்கி, நாமலின் கேள்வி

எஸ்பெஸ்டஸ் தடையை தளர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தது எதற்காக என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இவ்வாறு வினவியுள்ளார்.

சுகாதார பிரச்சினைகள் திடீரென காணாமல் போயுள்ளதா அல்லது வௌிநாட்டு மற்றும் சந்தை கொள்கையில் தவறிழைக்கப்பட்டுள்ளதா என நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார பிரச்சினைகள் காரணமாக எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு தடை செய்யப்பட வேண்டும் என , சுகாதார அமைச்சர் பதவியில் இருக்கும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தாக நாமல் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படியாயின் , குறித்த தடையை எதற்காக தளர்த்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. தடை போட்டது உங்கள் தந்தையா??

    ReplyDelete

Powered by Blogger.