Header Ads



எமக்கு அதி­கா­ரங்­களை தாருங்கள், ஒரு ரூபாய்கூட ஊழலற்ற ஆட்­சி­யை முன்­னெ­டுத்து காட்­டு­கின்றோம்

ஊழல், மோச­டிகள், குற்­றங்கள் நிறைந்த ஆட்­சியில் இருந்து நாட்­டையும் மக்­க­ளையும் மீட்­டெ­டுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி மாற்­றுப்­பா­தையில் கள­மி­றங்­கு­கின்­றது. உள்­ளூ­ராட்சி சபையின்  எமது வெற்றி 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தை  தீர்­மா­னிக்கும் போராட்டம் வரையில் நீடிக்கும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் தமது தேசிய மாநாட்டில் சூளு­ரைத்­துள்­ளனர். 

எமக்கு அதி­கா­ரங்­களை தாருங்கள் மக்­களின் நிதியில் ஒரு ரூபாய் கூட ஊழல் இடம்பெ­றாத ஆட்­சி­யை முன்­னெ­டுத்து காட்­டு­கின்றோம் எனவும் அவர்கள் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளனர். 

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்கள் மாநாடு நேற்று கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங் கில் இடம்­பெற்­றது. மக்கள் விடு­தலை முன் ­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக உள்­ளிட்ட கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள், உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்கள் மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சர்­வ­தேச பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலர்  கலந்­து­கொண்­டனர்.  மாநாட்டில்  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக உரை­யாற்­று­கையில், 

மக்கள் விடு­தலை முன்­னணி நீண்­ட­தொரு போராட்­டத்தை நடத்தி இன்று முக்­கி­ய­மான ஒரு கட்­டத்­திற்கு நாட்­டை கொண்­டு­வந்­துள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்ப­டாது மூன்று ஆண்­டு­களை கடந்­துள்ள நிலையில் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்ற மிகப்­பெ­ரிய போராட்­டத்தை நாம் பாரா­ளு­மன்­றத்தின் உள்ளும், வெளி­யிலும் முன்­னெ­டுத்தோம். அவ்­வாறிருக்­கையில் இன்று அர­சாங்கம் வேறு வழி­யில்­லாது மக்­க­ளுக்கு பொறுப்புக் கூற­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. இதற்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணியே முக்­கிய கார­ண­மாகும். இந்தத் தேர்­தலை சாதா­ரண தேர்­த­லாக கருத வேண்டாம். உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு நடத்­தப்­படும் தேர்­த­லாக இருந்­தாலும் இதுவே நாட்டின் மாற்­றத்­தை உரு­வாக்கும் அடித்­த­ள­மாகும். அவ்­வாறிருக்­கையில் இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பலத்­தினை உரு­வாக்க நாம் சகல முயற்­சி­க­ளையும் முன்­னெடுத்து வரு­கின்றோம். 2020 ஆம் ஆண்டு மிகப்பெ­ரிய புரட்­சி­கர மாற்­றத்தை உரு­வாக்கும் ஆண்­டாக அமையும். அதில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பலம் என்­ன­வென்­பது அனை­வ­ருக்கும் தெரி­ய­வரும். எமது ஆட்­சி­யினை அமைத்து மக்­களின் சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களை பெற்றுக்கொடுத்து பொரு­ளா­தார ரீதியில் நாட்­டை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்­க­மாகும்  என்றார்.  

3 comments:

  1. இலங்கை இந்தளவு வங்குரோத்து நிலையை அடையக் காரணம் நிதி ஊழல் போன்றே மொழி ஊழலும்தான். 

    தேசிய மொழிகளாகிய தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்றில் தமக்கு வேண்டிய எந்த மொழியிலும் தமது தேவைகளைப்  பூர்த்தி செய்யக்கூடிய விதம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி நிர்வாகம் சுமுகமாக நடக்கும் என்றால் இன ரீதியான அரசியலுக்கே இந்நாட்டில் இடமிருக்காது.

    இதனை பகிரங்கமாக உங்கள் அரசியல் மேடைகளில் உத்தரவாதம் தந்து அதனை உள்ளூராட்சி சபைகளில் நிரூபிக்க முடியும் என்றால் 2020 ஆச்சரிய அரசியல் வெற்றி தொடு தூரம்தான்!

    ReplyDelete
  2. Both UNP and SLFP have proved themselves as corrupted to extreme. It wouldn't hurt to give a chance to JVP. Even if they do not govern 100% perfectly they cannot be worst compare to the other two parties.

    ReplyDelete

Powered by Blogger.