Header Ads



பலஸ்தீனத்திற்காக நாம் எப்போதும், ஆதரவு கரம் தூக்குவோம்

"உலகின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளி! கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்" என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன் இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. 

பலஸ்தீன -இலங்கை நட்புறவு அமைப்பின் செயலாளரும் ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக உரையாற்றுகையில், 

நடுநிலையாகவும், மனிதாபிமான ரீதியிலும் சிந்திக்கும் நாடுகளே உலகில் அதிகமாக உள்ளன என்பது தற்போது பலஸ்தீன விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசாங்கத்தின் அச்சுறுத்தலான செயற்பாடுகளை சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளாது உலக நாடுகள் அனைத்தும் நியாயத்தின் பக்கம் உள்ளன. இலங்கையும் அதனை நிருபித்துக்காட்டியுள்ளது. பலஸ்தீனத்தின் சுதந்திரம் இன்று பறிபோயுள்ளது என்றால் அதற்கு முதல் காரணம் ஐக்கிய நாடுகள் சபையேயாகும். கடந்த 50 ஆண்டுகளில் முழுமையான ஆதரவு இஸ்ரேலின் பக்கமே இருந்துள்ளது. பாதுகாப்பு சபையின் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் அனைத்துமே இஸ்ரேலின் பக்கமே இருந்துள்ளன. அதன் விளைவே இன்று பலஸ்தீனம் அழிந்து வரவும் காரணமாக அமைந்துள்ளது. எனினும் இன்று உலக நாடுகளின் நடுநிலையான செயற்பாடுகள் அமெரிக்காவை புறந்தள்ளியுள்ளது. ஆகவே பலஸ்தீன விவகாரத்தில் நாம் எப்போதும் ஆதரவு கரம் தூக்குவோம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றார்.

1 comment:

  1. சரியானகருத்து, 50 வருட துரோகத்தையும் சேர்த்து.இது அரசியலுக்கா இல்லாமலிருக்க الله வை பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.