Header Ads



"அழகுசாதனப் பொருட்களை, பயன்படுத்தும் போது அவதானம்"

ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான சட்ட விதிகளை விரைவாக தயாரிக்குமாறும், சந்தையில் ஆய்வுகளை நடத்துமாறும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனால் நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உடனடி பெறுபேறுகளை பெற்று தருவதாக கூறப்படும் ஆககூடுதலான கேள்விகளைக் கொண்ட அழகு சாதனப் பொருட்கள் பலவற்றில் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. காலாவாதியாகும் திகதியும் அவற்றில் இல்லை. தயாரித்த நாடு தொடர்பான குறிப்பும் இடம்பெறுவதில்லை எனத் தெரியவந்துள்ளது. 

அத்துடன், அவற்றில் அடங்கியுள்ள இரசாயனம் குறித்தும் வௌிப்படுத்தப்படாத 6 வகையான வைட்னிங் கிரிம் எனப்படும் அழகு சாதன பொருட்களின் மாதிரிகள், புறக்கோட்டை வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து, இவை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அவற்றில் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித உடலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய உலோகத்தன்மை குறித்த அறிக்கை ஒன்று பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

2017 டிசம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தப்பட்ட அறிக்கை மாளிகாகந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, பாவணையாளர்களை தவறான வழியில் இட்டு சென்று மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிரிம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் அனைவருக்கும் தலா 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டது. 

ஆககூடுதலான கேள்விகளை கொண்டவற்றின் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறான கிரிம் வகைகளை சந்தையில் இருந்து அகற்றுமாறும், கிரிம் வகைகளின் வர்த்தக குறியீட்டை ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு தெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, அதன் அதிகாரி ஒருவர் வெளிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதுஇவ்வாறு இருக்க, பரிசோதனையின் போது இவற்றில் ஈயம், ஹாசனிக் உள்ளிட்டவை அளவுக்கதிகமாக காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இறக்குமதியாளர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் போன்றோரின் விபரம் எதுவும் குறிக்கப்படாத, வர்த்தக குறியீடுடன் சமர்ப்பிக்கப்படும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை கேட்டுகொண்டுள்ளது. 

இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்ய அவற்றில் அடங்கியுள்ளவற்றை கவனத்தில் கொள்ளுமாறும் அதிகார சபை கேட்டு கொண்டுள்ளது என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.