December 23, 2017

பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதால், இலங்கைக்கு கடும் ஆபத்து - தமிழ் பத்திரிகை விசனம்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன் மூலம் அமெரிக்காவின் அதிருப்திக்கு இலங்கை உள்ளாகியுள்ளதுடன், இதுவரை காலமும் அந்த நாட்டிடம் இருந்து பெற்றுவந்த நேரடி மறைமுக நிதிகளை இழக்கும் அபாய நிலையும் தோன்றியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் உள்ளக மற்றும் இராஜதந்திர மட்டத்தில் அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என அயலுறவுத்துறை அமைச்சு வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்தத் தீர்மானம் மீது நேற்று முன்தினம் இரவு ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

128 நாடுகள் ஆதரவாகவும், 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை. இலங்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது.

இந்த விடயம் அமெரிக்காவைக் கடும் அதிருப்திக்கு உட்படுத்தியுள்ளது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வரும் நேரடி, மறைமுக நிதிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே மிரட்டியிருந்தார்.

இதுபோன்ற வில்லங்கமான தனது அறிவிப்புக்களைச் செயற்படுத்துவதில் அவர் பெயர் போனவர் என்பதால், இலங்கைக்கும் ஆபத்து இருப்பதாகவே கருதப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் முஸ்லிம் வாக்குகளைக் கருத்தில் கொண்டு ஜெருசலேம் விவகாரத்தில் இலங்கை அரசு நடுநிலை வகிக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நாடுகள் தொடர்பில் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் ட்ரம்பின் அதிரடியான சில முடிவுகள் வெளிவருமென வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி பன்னாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து உள்ளக மற்றும் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசு தீவிர பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அமெரிக்காவால் இலங்கைக்கு 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்தம் நேரடி மற்றும் மறைமுக நன்கொடையாகக் கிடைத்து வருகின்றது. இந்த நிதிக்கு ஆபத்து வரக்கூடும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

- Uthayan

18 கருத்துரைகள்:

What a distorted misleading bigotted article with crocodile tears of loss of US assistance?
Heads of 128 countries who voted against USA didnt have such a concern n brain as Udayan editor bragging about.
This short sighted cruel mentality is the main prime factor which led to the desasterous miserable consequences of our Tamilcommunity .
Udayan is nothing but a rubbish sheet. Unfortunate readers would b led to darkness of ignorance.

yappaum vera nattil irunthuthan uthavi pera venduma ...

Uthayan paawam neenga...KARUNA wudan serunga.nalla panam kedaikkum.

ஆக 22மி டாலருக்காக தன்மானத்தை அட(கு)வைக்கனும்.நிதிப்பிச்சை இத்தன வருடமா கிடைத்து நாடு கடன்பிரட்சினையிலிருந்தாவது மீண்டிருந்தால் பரவாயில்லை. நீங்க சப்போட் பண்ணாட்டியும் பழய ஜெனீவா விடயத்தால நோண்டதான்போரான். 128 நாடுகளில் இப்படி சிறுசிறு நிதியுதவி கிடைக்கப்படும் நாடுகளும் உள்ளன.

ஆனால் தேர்தலும் ஒருமுக்கிய காறணம் என்று தெரியாமலில்லை.

Some people are stupid even after 128 countries said it is wrong.

(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
(அல்குர்ஆன் : 13:16)

இந்த உதயன் என்பவர்கள் எப்போதும் இஸ்ரேல் நாட்டை ஆதரிப்பவர்கள்

முதுகெலும்பு இல்லாதவர்களின் கருத்துக்களை வாசித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

THE article is wrong.... IT is not only SriLanka... Whole world is opposing the stupidity of US policy on Palestine case.

It is crystal clear to the world that ZEONIST is stealing the land of palestine.. that is why 1967 UN resolution also did not accept Israel demands on Jerusalam. Even most of the past US presidents realized the truth and stood away from agreeing for it directly. BUT shame this time American people got a Stupid Leader...Who only promised Israel for his own benefits and trying to apply his arrogance on Palestine and whole Muslim world in a wrong way. So Whole world still respect the feelings of Palestinians and voted against US stupidity.

What this writer wanted ... ? You wanted separate state from sri-Lankan with the help of US.....which did not work.. You wanted same for your Israel ally .. Soryy.com.

American govt behaving like firawn
Oppressing every muslims country.
They will get return in the future.
Will see what is the result in future for America

PULI PAYANGARAWATHIKALIN ECHCHA CHOCHAM ELUTHI IRUKKAAN.. PAAVAM

உதயனுக்கு அமெரிக்கா வின் உதவி மட்டும்தான் கண்ணுக்கு தெரியுதோ ஏன் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் அள்ளி வழங்கும் உதவிகள் விளங்குதில்லையோ? பாவம் புத்திசாலி என்ற தவறான கணவு

இந்த உதயன் பத்திரிகையில் இக்கருத்தை எழுதியவர் எதுவும் தெரியாத கிணற்று தவளையாக இருக்கின்றார் தம்பி அரபு நாட்டிலிரந்து இலங்கையை நோக்கிவரும் உதவிதொகைகளை அரசாங்கத்திடம் கேட்டுத்தெரிந்திக்கோ மேலும் அங்கிருந்து வரப்போகும் உதவிகளை நீ தெரிந்து கொண்டால் நீ கடவுளாக நினைக்கும் உன் அமெரிக்காவும் அவன் உதவியும் பிச்சக்காசி என்று விளங்கிக் கொள்வாய்! மேலும் இந்த அமெரிக்கா உன்னிடமிருந்து கொள்ளையடித்தே உனக்கு உதவிசெய்யும் பெயரில் உன் இரத்தத்தை உருஞ்சிபவன் மேலும் அவன் உலவங்கியில் உள்ள அனைத்து பணங்களையும் கடன் என்று எடுத்து அவனுடைய நாட்டுமக்களுக்கு கொடுத்து விட்டான் சுமார் 3000 திருலியன் அளவில் அவன் உலமக்களுக்கு கடன் கொடுக்க வேண்டியுள்ளது உமக்கு தெரியுமா?

உதயன் என்கிற தமிழ் பயங்கரவாத ஊடகங்களெல்லாம் இப்படி கட்டுரை எழுதாமல்விட்டால் தான் ஆச்சரியம்

Whatever.... SL deserves the punishments (both monetarily & politically) for this stupid decision.

ட்ரம் ஒரு கழுதை

Even after many evidence kept for the stupidity of USA... Some people do support the stupidity... That is like " The tail of .... can not be straighten.

ட்ரம்ப் ஒரு கழுதை. அந்தோனி ஒரு பிணம் தின்னும் பேய்.

Post a Comment