December 27, 2017

றிசாத்தை 'காதைபிடித்து வெளியே போடுவேன்' என்ற ஞானசாரர் மீது நடவடிக்கை எடுக்குக

இலங்கை நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்லாயிரம் மக்களின் ஆதரவு பெற்ற  அமைச்சர் ஒருவரின் காதை பிடித்து வெளியே போடுவேன் என ஞானசார தேரர் கூறியிருப்பதானது முழு நாட்டையும் அவமதிக்கும் செயல் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்...

இம் மாதம் 26ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், அமைச்சர் றிஷாதை மிகக் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.அவரது விமர்சனம் சரியானதா அல்லது பிழையானதா என்பதற்கு அப்பால், ஒரு அமைச்சரை விமர்சனம் செய்ய, அதற்கென்று தகுந்த முறை உள்ளது. அந்த முறையை முழுமையாக மீறியே ஞானசார தேரர் விமர்சனம் செய்துள்ளார்.

பாராளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயரிய சபை. அந்த சபையில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கௌரவத்துக்குரியவர்கள். அவர்கள் இலங்கை நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவை பெற்றவர்கள். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சாதாராண உறுப்பினரை விட, ஒரு அமைச்சர் இன்னும் மரியாதைக்குரியவர். அவர்களை “ காதை பிடித்து வெளியே போடுவேன் ” என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இவர்களை அவமானப்படுத்துவது முழு நாட்டையும் அவமானப்படுத்துவது போன்றாகும். இந்த அவமானங்களை சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகள், எவ்வாறு மக்கள் முன்னிலையில் நெஞ்சை நிமிர்த்தி செயற்படுவார்கள்?

இவ்வாட்சி காலப்பகுதியில்  ஞானசார தேரர் மித மிஞ்சிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். யாரையும் அவர் மதிப்பதாகயில்லை. அந்தளவு கௌரவம் வழங்குமளவு இவர் நல்லவருமல்ல. இவரது செயற்பாடுகள் சிறந்தவைகளுமல்ல. குறைந்தது இந்த ஆட்சியானது கௌரவத்துக்குரிய  அமைச்சர்களின் மரியாதையையாவது தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இப்படி கருத்துக்களை வெளியிடும் ஞானசார தேரர் போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கூறுகிறோம்.

முன்னதாக ரனில் விக்ரமசிங்கவை மிக மோசமாக திட்டித்தீர்த்த ஞானசாரரை வேடிக்கை பார்த்த நல்லாட்சி அரசு அமைச்சர்களை அவர் விமர்சிக்கும் போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 கருத்துரைகள்:

யார் சொன்னால் என்ன, சொன்ன கருத்து சரியானது தானே!

கௌரவம் கேட்டு வாங்குவதண்று

ஞானசார சொன்னதில் எது சரி என்கிறீர்ரகள் அப்ப வில்பத்து தேசிய பூங்கா 2012ம் ஆண்டா பிரகடணப்படுத்தப்பட்டது? அல்லது மக்கள்ள குடியேறிய பின்னர் 2012ம் ஆண்டு கல்லலாறு ஒதுக்கிடம் என்று புதிதாக உருவாக்கப்பட்டதா? வில்பத்துவை நிறுவகம் செய்வது வனவிலங்கு திணைக்களமா? அல்லது வனத்ததிணைக்களமா? இதெல்லாம் தெரியாம இனவாதம் மட்டும் பேசும் உங்களுக்கு விடிவே வராது. சரி அதே பத்திரிகையாளர் மாநாட்டின் அவர் சொல்லும் யாழ்ப்பாணம் தொடர்பான விடயங்களும் உண்மையாகத்தான் கொணண் வேண்டுமே? அதுக்கு வேற நியாயயம் இதுக்கு வேற நியாயம்

அந்தோனி, உம்முடைய கருத்து சம்பந்தமாக.

நிசாத் அமைச்சர், தொடர்பாக ஞானசாரன் சொன்ன கருத்தில் எது சரியென உம்மால் தெளிவு படுத்த முடியுமா. ஒன்று மட்டும் நீர் ஞாபகம் வைத்துக் கொள் மக்களின் வாழ்வுரிமை வாழ்வாதாரம் சம்பந்தமாக உதவி செய்யும் எந்தவொரு நபரும் அது எந்த அயைச்சராகவும் இருக்கலாம் ஏன் நீராகவும் இருக்கும் அதை வரவேற்பதே ஒரு நல்ல மனிதம்.

நீர் தற்பேறு வாழ்ந்து வரும் இடத்தை விட்டு குடும்பத்துடன் சுமார் 30 வருடம் எங்காவது தொலைந்து போய் மீண்டும் 30 வருடங்களின் பின் அவ்விடத்துக்கு வந்து பார். உம்முடைய இருப்பிடத்துட்டு ஏதாவது காட்டின் பெயரை வைத்து உம்மை பைத்திய மாட்சி விடும் இந்த சமுதாயம்.

நான் சொல்ல வருவதனைத்தையும் இங்கு எழுத முடியாது. உமக்கு விழங்கும்.

இங்கு றிசாட் எனும் முஸ்லிம் ஒருவர் செய்வதால் அது தாங்க முடியாமல் உள்ளது இதே விடயத்தை ஒரு றிசாந்த எனும் சிங்களவர் சிங்கள மக்களுக் இவ்வாறு உதவி செய்தால் இந்தஞானசார போன்ற சக் கிலிகள் வாய் திறப்பார்களா என்பதை நீர் ஒரு படித்தவனாக இருந்தால் உமக்கு புரியும்.

எந்தவொரு விடயத்தையும் பொதுவான ஒரு positive ஆன கண்ணோட்டத்துடன் பார்க்க பழகிக் கொள். அவ்வாறன்றி துவேசத்தனத்துடன் Negative ஆன கண்ணோட்டத்துடன் பார்க்காதே அது உமக்கு மட்டுமல்ல நீர் சார்ந்த சமூகத்தின் எதிர்காலத்துக்கும் சாபக்கேடாக அமையும்.

Post a Comment