Header Ads



ஜெருசலம் விவகாரம் - முஸ்லிம்களின் சார்பில், இலங்கை அரசுக்கு நன்றிகூறும் ஹலீம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஜெருசலேம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிரான யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் அமைச்சர் ஹலீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் என்ற வகையிலும், பலஸ்தீன முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் ஆர்வமும், அக்கறையும் உள்ளவர் என்ற வகையிலும் இந்த நன்றியை இலங்கை முஸ்லிம்கள் சார்பில், இலங்கை அரசுக்கு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பிலுள்ள பலஸ்தீன் தூதரகத்துடன் தாம் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் அதுதொடர்பிலான பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதுடன் இதுதொடர்பிலான பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புகளில் பலஸ்தீன் மக்களுக்கான உரிமைகள் பற்றி தாம் வலியுறுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களிலும் பலஸ்தீன் விவகாரம் மற்றும் அங்குள்ள முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் தமது உயர்மட்ட பங்களிப்பு தொடர்ந்து இருக்குமெனவும் அமைச்சர் ஹலீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.