Header Ads



ஜனாதிபதி ட்ரம்பின் எண்ணக்கருவில், உக்கிரமான இனவாதம்தான் உள்ளது

அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு நல்லிணக்கத்தை கற்பிக்க முயற்சித்த போதிலும் அந்நாடுகளில் நல்லிணக்கம் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உலக அரசியலை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா, இங்கிலாந்து என அனைத்து நாடுகளும் எமக்கு நல்லிணக்கத்தை கற்றுக்கொடுக்க வருகின்றன.

அவர்களின் எண்ணக்கருவை எமது தலைக்குள் இடுகின்றனர்.

எனினும் அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்பின் எண்ணக்கருவில் நல்லிணக்கம் இல்லை. அது உக்கிரமான இனவாதம்.

மேற்குலக நாடுகள் உலகத்திற்கு திறந்து விடப்படவில்லை. நாமே அனைத்து திறந்து வருகின்றோம்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு எம்மிடம் கூறினாலும் அந்நாடுகளில் நல்லிணக்கம் என்பது கிடையாது. எமக்கு வெளிநாடுகளில் ஆலோசனைகள் தேவையில்லை.

நாம் நமது நாட்டுக்கே உரிய தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.