Header Ads



அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொள்ள, கோளங்களை ஒப்பிட்டுப்பாருங்கள்..!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், "யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்." (நூல்: புகாரி)

பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுறுகிறார்களா? என்றால்,

அல்லாஹ் கூறுகிறான்,

''(நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது''. (அல்குர்ஆன் 27:80)

பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் "பிரார்த்தனை வணக்கத்தின் மூளை" (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

"பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்" (நூமானுபின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத், திர்மிதீ)

''மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.'' (அல்குர்ஆன் 40:60)

"நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே.'' (அல்குர்ஆன் 7:194)

''எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 13:14)

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான்.

அல்லாஹுத்தஆலா தனது பார்வையில் இந்த பூமி ஒரு கொசுவின் இறக்கைக்கு கூட சமமில்லை என்கிறான் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நம்ப வேண்டுமா......! இங்கு இடம்பெற்றுள்ள கோளங்களின் ஒப்பீட்டை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

நம் கண்பார்வைக்கு மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும் இப்-பூமி மற்ற கோளங்களுடன், நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளியளவுக்குக்கூட இல்லை.

இந்த சிறு புள்ளியளவுக்குக்கூட தெரியாத இந்த பூமிக்குள்தான் கோடான கோடி மக்களை, படைப்புகளை அல்லாஹ் படைத்துள்ளான். அப்படியிருக்கையில் இந்த மனிதனைப்போய் அல்லாஹ்வுக்கு இணையாக்குவதோ அவனது அதிகாரத்தில் பங்குள்ளவனாக எண்ணுவதோ, ஏன் கற்பனைகூட செய்வதோ கொஞ்சமேனும் பொருத்தமாக இருக்குமா?

தயவு செய்து சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே!

இப்படத்தில் சூரியனின் அளவே சின்னதாகத் தெரிகிறது.    பூமி இருக்கும் இடமே தெரியவில்லை....

ஆனால் கண்ணுக்கே தெரியாத அந்த சின்ன பூமியில் தான் கோடான கோடி ஜீவராசிகளை அல்லாஹ் படைத்துள்ளான்.

இந்த சின்ன பூமியின் படைப்பே நம்மை வியப்பிலாழ்த்தும்போது மற்ற பிரம்மாண்டங்களில் எல்லாம் என்னென்ன வைத்துள்ளான்... நிச்சயமாக நமது அறிவுக்கு எட்ட வாய்ப்பே இல்லை.

அவ்வாறு இருக்கையில் அந்த ஏக வல்ல இறைவனுக்கு இணை வைக்கலாமா? எவ்வளவு பெரிய பாவம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

மறுமையில், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தப்பிக்க முடியாது சகோதர சகோதரிகளே! ஏனெனில் கல்வி கற்பது அனைத்து ஆண், பெண் மீதும் இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது.

"ரப்பி ஸித்னீ இல்மா"

- M.A. முஹம்மது அலீ

11 comments:

  1. அழகான ஒரு ஆக்கம், அல்லாஹ் கட்டளை இட்டவைகளில் வணக்கத்தால் அவனை ஒருமைப் படுத்துவதே முதல் கட்டளை ஆகும், மேலும் அவன் தடுத்தவற்றில் மிகப் பெரிய பாவம் இணைவைத்தல் ஆகும்.நபியவர்களின் 23வருட தஃவாப் பணியின் அரைவாசி காலம் (13வருடம் மக்காவில்)இணைவைப்பை எதிர்த்து ஓறிக் கொள்கையையே போதித்தார்கள் என்பது இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். எம்மில் பலர் இணைவைப்பு என்றால் சிலை வணக்கம் மாத்திரம் என்று நினைக்கின்றனர், மாறாக இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வுக்கு கொடுக்கும் வணக்கங்களுல் ஏதாவதொன்றை இன்ன்மொருவருக்கு கொடுப்பதாகும், அதில் சிலை,மரம்,கற்கள்,உருவப்படங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள்,கோள்கள்,மண்ணறைகள்,அவ்லியாக்கள்,தர்ஹாக்கள் எல்லாம் அடங்கும், மேலும் கொடுக்கப்படும் வணக்கம் துஆக்கேட்டல்,அறுத்துப் பலியிடல்,நேர்ச்சை செய்தல்,தவாப் வருதல்,பாதுகாவல் தேடுதல்,தஞ்சமடைதல் எல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். இன்று ம்மில் சிலர் இணைவைத்தலை வணக்கமாக நினைத்து செய்கின்றனர்,இதனால் ஏற்படும் பாரதூரங்கள் பின்வருமாறு:
    1- இணைவைத்த நிழையில் மரணித்தவர் சுவர்க்கம் நுழையவே மாட்டார்.
    2-இணைவைத்த நிழையில் எந்த ஒரு நற்காரியமும் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
    3-அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.(அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்)
    4- அல்லாஹ் இணைவைப்பவனை கைவிட்டு விடுவான்.
    5- இணைவைத்தோர் நரகில் நிழையாக வேதனை செய்யப்படுவார்க.
    அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  2. சரியான தகவல்கள்; பிழையான படம்.

    "அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்."
    (அல்குர்ஆன் : 2:255)
    www.tamililquran.com

    ReplyDelete
  3. May Allah Bless You for this writing

    ReplyDelete
  4. நீங் என்னத்த ஓதினாலும் மாறமாட்டோம், கப்ரிலுள்ள அவ்லியாகிட்டதான் கேட்போம், ஏனெனில் தூணும் அவனே துரும்பும் அவனே. கந்தூரி கொடுத்தா எல்லாப்பிரச்சினையும் தீரும்.

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவனை யாராலும் வழிகெடுக்க முடியாது, யாரை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனுக்கு யாராலும் நேர்வழி கொடுக்க முடியாது.
      முத்திரை இடப்பட்ட உள்ளங்களுக்கு சத்தியம் தென்படாது.அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

      Delete
    2. அ,ஸலாம்... சகோதரர் @சத்தியக் குரல்: நீங்கள் எனது Profile Pic ஐ வாசிக்கவில்லையா? நான் எழுதிய பின்னூட்டம் அவ்வாறு வீண்பிடியாக இருப்பவர்களுக்காக.அர்த்தம் புரிந்தால். மீண்டும் கருத்துப்பதிவிடுங்கள்.

      Delete
  5. சகோ. Ramy............

    நீங்க சொல்ற எந்த அவ்லியாவுக்கும் வழிகாட்டணும் - நபி ஸல் அவர்கள் மாத்திரமே. நபியைப் பின்பற்றாத எவனும் அவ்லியாக ஆகமுடியாது. அவன் அவ்லியாவாக ஆகினானா இல்லையா என்று எமக்கும் தெரியாது உங்களில் உள்ள யாருக்கமே தெரியது - அது அல்லாஹ்வுக்க மாத்திரமே தெரிந்த இரகசியம்.

    அல்லாஹ் அவ்லியா என்று வெளிப்படுத்திக் காட்டிய யாரும் நீங்கள் வணங்கும் கப்ருகளில் அடக்கப்பட்டிருக்கவில்லை.

    அப்படித்தான் நீங்கள் வணங்கும் அவ்லியா உண்மையான அவ்லியாதான் என்று வைத்துக்கொன்டாலும்கூட - அந்த அவ்லியா எந்த அவ்லியாவுக்கு கந்தூரி கொடுத்து தான் அவ்லியாக மாறினார் ????

    நபி ஸல் அவர்களுக்கு கந்தூரி கொடுத்தா ???? ஏனெ்னறால் அவங்கதான முதல் அவ்லியா. மிப்பெரிய அவ்லியா.

    அப்போ அந்த சில்லற அவ்லியாக்கள உட்டுட்டு நபி ஸல் அவங்களுக்கு கந்தூரி கொடுங்க.

    ஆனால் அந்த நபிதான் தன்னுடைய கல்லறையை வணக்கஸதலமாக மாத்திப் போடாதீங்ன்னு மிகக் கடுமையாக அதனை தடை செய்தஞ்சு போட்டாங்க.

    ஆனால் அது எதையும் நாங்க கேக்க மாட்டோம்னு அடம் புடிச்சு -
    நாங்க செய்றத்த்தான் செய்வோம் என்று நீங்க கந்தூரி கொடுத்தால் - நீங்க நாசமாப் போறத யாரலதான் தடுக்க முடியும் ?????? போய்த் தொலைங்கோ..............

    ReplyDelete
    Replies
    1. அ,ஸலாம்... சகோதரர் @Mohamed Raffi Aboothahir :

      நீங்கள் எனது Profile Pic ஐ வாசிக்கவில்லையா? நான் எழுதிய பின்னூட்டம் அவ்வாறு வீண்பிடியாக இருப்பவர்களுக்காக.நீங்கள் நேரம் ஒதுக்கி இந்த உன்மையை எனக்காக எழுதியதற்கு ...جزاكالله. எனது பதில் புரிந்தால் மீண்டும் கருத்துப்பதிவிடுங்கள்.

      Delete
    2. ஆம் Ramy
      இப்படியான profile வைத்திருக்கும் ஒருவர் அதற்கு நேர்முரணான கொல்கையில் இருப்பாரா என்று நானும் ஆச்சரியம் அடைந்தேன்.
      அல்லாஹ் உங்களை சத்திய மார்க்கத்தில் நிலையாக்கி வைக்கட்டும்.

      Delete
    3. انشا الله உங்களுக்கும்...

      Delete
    4. آمين
      ان شاء الله وبإذن الله.

      Delete

Powered by Blogger.