Header Ads



பாகிஸ்தானின் மனிதாபிமானம்..!!!


பாகிஸ்தானுக்குள் முஸ்லிம் பாஸ்போர்ட்டுடன் ஊடுருவி அந்நாட்டுக்கு எதிராக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், குல்பூஷன் ஜாதவ் என்ற முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது.

இதற்கிடையில்,

'காயிதே ஆசம்' முஹம்மத் அலி ஜின்னா பிறந்த நாளை முன்னிட்டு, ஜாதவை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

இச்சந்திப்பு சிறையில் நடப்பதற்கு பதிலாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கான இந்திய ஹை கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் ஜாதவை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் மிகுந்த பாதுகாப்பு கெடுபிடியான அவ்வலுகத்தில் நடந்த இச்சந்திப்பு கண்ணாடி திறைக்குப் பின்னால் வைத்தே நடத்தப்பட்டது.

இண்டெர்காம் உதவியுடன் ஜாதவை சுமார் 45 நிமிடம் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

ஜாதவ் குடும்பத்தினர், கைதியை சந்திக்க கருணை மனு போட்டு வந்தவர்களானாலும், வெளிநாட்டு சிறப்பு விருந்தினரை போல நடத்தப்பட்டனர்.

முன்னதாக, விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை உரிய பாதுகாப்புடன் இந்திய தூதரகத்துக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளே அழைத்துச்சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. http://www.bbc.com/tamil/global-42483151

    It's totally a different story here.

    ReplyDelete

Powered by Blogger.