Header Ads



A/L பரீட்சை, தேசிய ரீதியில் முஸ்லிம் மாணவியும், பிக்குவும் சாதனை


நடைபெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளுடன் சிறந்த பெறுபேற்றை மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி திலினி சந்துனிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன 

பௌதீக விஞ்ஞான பிரிவில் பிரிவில் (physical science) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

இதுதவிர மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் துலானி ரசந்திகா என்ற மாணவி வர்ததகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

கொழும்பு சென். போல்ஸ் மகளிர் பாடசாலையை சேர்ந்த பாத்திமா அகிலா இஸ்வர் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார். 

அதேவேளை இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவெனா கல்விக் கூடத்தின் பத்பெரியெ முனிந்தவங்கச தேரர் கலைப் பீடத்தில் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

1 comment:

Powered by Blogger.