Header Ads



A/L பரீட்சையில் குறைந்த சித்தியுடன், இனிமேல் மருத்துவர் ஆகலாம்

மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை, வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 

மருத்துவக் கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்து சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.  

இதற்கமைய, குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக்குறைந்த Credit Passed (C) சிததிகள் இரண்டையும் Somple Paases (S) ஒன்றை ஒரே தடவையில் பெற்றிருக்கவேண்டும் என்பதே, ஆகக்குறைந்த தகைமைகள் என, அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.  

அதனடிப்படையில், இலங்கை மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக, அரசாங்க வர்த்தமானியின் வெளியிடுவது தொடர்பில், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்து அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.     

1 comment:

  1. இந்த ஏற்பாட்டினால் ஏதாயினும் பிரயோசனம் உண்டா? போட்டிப் பரீட்சையில் உயர்ந்த புள்ளியே வைத்திய துறையை தீர்மானிக்கும். இது ஒருவர் மனரீதியாக நானும் தகுதி உடையவன் என சந்தோசப்பட்டுக் கொள்ள மட்டுமே உதவும்

    ReplyDelete

Powered by Blogger.