Header Ads



யானைகளின் அச்சுறுத்தல் - 8 வாக்கெண்ணும் நிலையங்களை மாற்ற கோரிக்கை


மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் யானை­களின் அச்­சு­றுத்­த­லுள்ள 8 வாக்­கெண்ணும் நிலை­யங்­களை வேறு இடங்­க­ளுக்கு மாற்­று­வ­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அனு­ம­தியை கோரி­யுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணை­யாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

புதன்­கி­ழமை மாலை மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதி­பரும் மாவட்ட தெரிவத்­தாட்சி அலு­வ­ல­ரு­மான எம். உத­ய­குமார் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கலந்­து­ரை­யா­டலில் தொட ர்ந்தும்  கருத்து தெரிவித்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணை­யாளர் ஆர்.சசீலன் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் எதிர் வரும் உள்­ளூராட்சி மன்ற தேர்தலில் 457 வாக்­கெ­டுப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இம்முறை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலில் வாக்­கெ­டுப்பு நிலை­யங்­க­ளி­லேயே வாக்­கெண்ணும் நட­வ­டிக்­கைகளும் இடம்பெற­வுள்­ளன.

வாக்­கெ­டுப்பு நிலை­யங்கள் வாக்­கெண் ணும் நிலை­யங்­க­ளா­கவும் செயற்­ப­ட­வுள் ளன.

தேர்தல் முடிந்­த­வு­ட­னேயே வாக்­கெண் ணும் பணிகள் ஆரம்­ப­மாகி வட்­டா­ரத்தில் தெரிவு செய்­யப்­படும் உறுப்­பினர் அறி­விக்­கப்­ப­டுவார்.

பின்னர் ஒவ்­வொரு வட்­டா­ர­மாக பெற்ற வாக்­குகள் எமது ஒருங்­கி­ணைப்பு நிலை­யத்­திற்கு அறி­விக்­கப்­பட்டு அங்கு வைத்து நாம் விகி­தா­சா­ரத்தை கணக்­கிட்டு விகி­தா­சார உறுப்­பி­னர்­களை சம்­பந்­தப்­பட்ட கட்­சி­க­ளுக்கு அறி­விப்போம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் படு­வான்­கரை பிர­தேசத்­தி­லுள்ள 8 வாக்­கெண்ணும் நிலை­யங்கள் யானை­களின் அச்­சு­றுத்­த­லுள்ள நிலை­யங்கள் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யங்­களில் மாலை 6 மணிக்கு பின்னர் வாக்­கெண்­ணு­வ­தற்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம். இதனால் நாம் அந்த வாக்­கெண்ணும் நிலை­யங்­களை வேறிடத்­திற்கு மாற்­று­வ­தற்கு, தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் அனு­ம­தியை கோரி­யுள்ளோம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலில் 389,582 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 144 வட்­டா­ரங்கள் உள்ளன. அத்­தோடு கோற­ளை ப்­பற்று வடக்­கிலும், களு­வாஞ்­சி­க்கு­டி­யிலும் இரட்டை வட்­டா­ரங்கள் உள்ளன. இத­னையும் சேர்த்து வட்­டா­ரங்­களில் இருந்து 146 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்யப்­ப­ட­வுள்­ள­துடன் விகி­தா­சா­ரத்தையும் சேர்த்து மொத்தமாக 238 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தலை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பும் முக்கியமானதாகும். தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஊடகவியலா ளர்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.