Header Ads



மினுவாங்கொடையில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி


எதிர்வரும் ( 2018 ) பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மினுவாங்கொடை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பல  களமிறங்கவுள்ளதாக, குறித்த கட்சிகளைச் சேர்ந்த செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொடை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லொழுவை, பொல்வத்தை ஆகிய வட்டாரங்களில், இம்முறை ஆறு  முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர். 

   ஸ்ரீல.மு.கா. சார்பில் ஐ.தே.க. வில் ஒருவரும், ஐ.தே.க. வில் மற்றுமொருவரும்,  ஸ்ரீல.சு.க. வில் இருவரும், ஸ்ரீல.பொ.பெ.வில் ஒருவரும், அ.இ.ம.கா. இல்  ஒருவருமாக இம்முறை ஆறு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது.     

புதிய எல்லை நிர்ணயப்படி,  மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட கல்லொழுவை மற்றும் பொல்வத்தை ஆகிய வட்டார எல்லைப் பிரதேசங்களிலேயே இவர்கள் ஆறுபேரும்  போட்டியிடவுள்ளனர். கல்லொழுவை, பொல்வத்தை, ஜாபாலவத்தை, கொட்டுகொடை, நில்பனாகொடை ஆகிய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை  வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.