Header Ads



இலங்கைக்கு 66 ஆவது இடம்

உலக உணவுப் பாதுகாப்பு சுட்டெண் பட்டியலில் இலங்கை 66ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏ.என்.ஐ. ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

உலகின் 113 நாடுகளுக்கு இடையில் பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த சுட்டெண் உருவாக்கப்பட்டு தரப்படுத்தப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சுட்டெண் அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா மொத்த பட்டியலில் 74ம் இடத்திலும், பாகிஸ்தான் 77ம் இடத்திலும் உள்ளன.

நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் 81 மற்றும் 80ம் இடங்களில் இருக்கின்றன.

பங்களாதேஸ் 89ம் இடத்தில் உள்ளது.

No comments

Powered by Blogger.