Header Ads



மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட, நிதியில் 60 வீதம் செலவளிக்கப்படவில்லை

மீள்குடியேற்றத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதமான நிதியே செலவளிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய நிதி பயன்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பிமல் ரத்நாயக்க தவறான தகவல்களை முன்வைத்ததாக அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் பதில் வழங்கினார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் ஆகிய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மலையகத்தில் ஆசிரியர் உதவியாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் மனோ கணேஷன் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என பதில் வழங்கினார்.

வடபகுதியில் இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் சுட்டிக்காட்ட அதற்கு அமைச்சர் மனோ கணேஷன் பதில் வழங்கினார்.

இதேவேளை, தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் தனியான கூட்டங்களை நடத்த வேண்டும் என ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அது தொடர்பில் ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இலங்கையின் அரச கரும மொழியே சிங்களமும் தமிழும் ஒருங்கே அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த வலியுறுத்த அதற்கு ஆவணம் செய்யப்படும் என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

1 comment:

  1. ஆகக் குறைந்தது, நாடளாவிய ரீதியில் பகிரங்கமாக வைக்கப்பட்டிருக்கும் அரச பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ்க் கொலைகளை அகற்றுவதற்கான வீரியம் இந்த அரசாங்கத்திடம் இருக்கிறதா?

    முடிந்தால் இதனைச் செய்து பாருங்கள்:  தமிழ் பேசும் மக்களின் ஐம்பது வீதமான வெறுப்பினை அந்நடவடிக்கை அகற்றும்; ஐம்பது வீதமான ஆதரவை அது கொண்டு வரும்.

    ReplyDelete

Powered by Blogger.