Header Ads



யாழ்ப்பாணத்தின் அடுத்த, மேயர் யார்..? பரிசீலனையில் 4 பேர்

யாழ்.மாநகர சபையின் மேயர், பிரதிமேயர் பதவி களை இலக்கு வைத்து கள மிறக்குவதற்காக நால்வரின் பெயர்களை இலங்கை தமிழரசுக் கட்சி பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித் துள்ளன. 

வடமாகாண சபை உறுப்பி னர்களான இ.ஜெயசேகரம், ஆர்னோல்ட், முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக அண்மையில் வடமாகாண சபை உறுப்பினரான தெரிவு செய்யப்பட்டுள்ள இ.ஜெயசேகரத்தினை மேயர் வேட்பாளராக களமிறக்க வேண்டும். அதன் மூலமாக யாழ்.மாநாகரசபையானது மிகக்கூடிய பலன்களை பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. ஆகவே ஜெயசேகரத்திற்கு குறித்த பதவியை வழங்க வேண்டும் என்று யாழ்.வணிகர் சங்கம் உள்ளிட்ட சில தரப்புக்கள் பரிந்துரைத்துள்ளன. 

அதேநேரம் வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் இளம் தலைமுறையை பிரதி நிதித்துவப்படுத்துபவராகவும், சட்டத்துறையைச் சார்ந்தவராகவும் காணப்படுவதால் அவரை யாழ்.மேயர் வேட்பாளராக களமிறக்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே தமிழரசுக் கட்சியின் தலைமையிடத்தல் பரிந்துரைத்துள்ளார்.

இதேநேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் ஏற்கனவே யாழ்.மாநகரசபையின் பிரதி மேயராக கடமையாற்றியவர். அத்துடன் மூத்த அரசியல்வாதி. ஆகவே அவருக்கான அங்கீகாரத்தினை வழங்கும் முகமாகவும் அவருடைய அனுபவத்தின் பிரகாரமும் தற்போதைய நிலையில் மேயர் பதவிக்கு மிகப்பொருத்தமானவராக இருப்பதால் மேயர் வேட்பாளராக அவரையே களமிறக்க வேண்டும் என்று தமிழரசுக்கட்சின் முக்கியஸ்தர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ளர்.

இவற்றுக்கெல்லாம் மேலாக சிரேஷ்ட ஊடகவியலாளரான ந.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைமை மற்றும் முக்கியஸ்தர்களிடத்தில் வித்தியாதரனின் நிருவாகத்திறமை சம்பந்தமான சாதகமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களாக இருக்கும் இருவரையும் மேயர் வேட்பாளர்களாக களமிறக்குவதை விடவும் சொலமன் சிறில் மற்றும் வித்தியாதரன் ஆகியோரை மேயர், பிரதி மேயர் பதவிகளை இலக்குவத்தைு வேட்பாளர்களாக களமிறக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் யாரை மேயர் வேட்பாளராக களமிறக்குவது யாரை பிரதி மேயர் பதவிக்கு தயார் படுத்துவதென்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. 

எவ்வாறாயினும் இவ்விடயம் குறித்து சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் ஆலோசனையுடன் கட்சித்தலைமை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலரே இறுதி முடிவு எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.