Header Ads



காவியுடை கட்டுப்பாடுகளை மீறி 4 பெண்களின், உயிரை காப்பாற்றிய பிக்கு


காலி - கொக்கல பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நான்கு பெண்களின் உயிரை இளம் பிக்கு ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

காலி பரகொட ரஜமஹா விகாரையைச் சேர்ந்த கொக்மாதுவ அநுரத்த என்ற பிக்குவே இவ்வாறு கடல் அலையில் அள்ளுண்டு சென்ற 4 பெண்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், தனது மகள்மார் அலையில் அடித்துச் செல்லப்படுவதாக கதறினார். எனினும், பலத்த அலை ஓசையினால் அவரது கதறல் எவருக்கும் கேட்கவில்லை.

இதனிடையே, கொக்கல விகாரையின் விகாராதிபதி அஜித தேரரின் உறவினர்கள் சிலர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். இதில் விகாராதிபதியின் சீடரான கொக்மாதுவ அநுருத்த பிக்குவும் சென்றுள்ளார்.

அதன்போது, தனது மகள்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்ட பெண்ணின் குரல் கேட்டவுடன், காவி உடையுடன் கடலுக்குள் குதித்து, கடலில் மூழ்கிய மூன்று பெண்களையும் காப்பாற்றியுள்ளார்.

இதேவேளை, மற்றைய பெண்ணை காப்பாற்றும் போது பிக்குவுக்கு உதவியாக வெளிநாட்டவர் ஒருவர் கைகொடுத்த நிலையில் அந்த பெண்ணும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அநுருத்த தேரர் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறான இடங்களில் நீராடுபவர்களின் பாதுகாப்புக்காக ஏதேனும் வழிவகைகள் செய்திருக்க வேண்டும். நான் காவி உடைக்கு உண்டான கட்டுப்பாடுகளையும் மீறி நான்கு பெண்களை காப்பாற்றியுள்ளேன்.

இருப்பினும் ஆபத்து வரும்போது நான் அதனைச் செய்தேன். அல்லல்படுபவர்களுக்கு உதவவேண்டும் என பௌத்த தர்மம் கூறுகின்றது. அதனாலேயே நான் இதனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

12 comments:

  1. We salute and highly appreciate Your honor reverent for your brave and valiant committment to save these young women in distress. We also highly appreciate the higher devotion of others including a foreigner who helped the reverent to save these women. God bless you reverent.

    ReplyDelete
  2. Dear brother!
    You have done good job.
    Special Salute for you.

    ReplyDelete
  3. Manas Safriya

    இந்த வகை மூளைகளுக்குத்தான் negative mentality எதை எடுத்தாலும் மோசமான பக்கம் மட்டும் பார்க்கும் எதிர்போக்கு சிந்தனை இந்த சிந்தனை அழிவைக் கொண்டுவரும். அந்த மனிதன் செய்த உயர்செயலைப்பார்த்து அவரைப்பாராட்டுங்கள். அதற்கு எதிரான சிந்தனை அழிவுக்கு அடையாளம். நன்றி
    Sarjoon Nazeer கருத்தையும் சற்று படியுங்கள்.

    ReplyDelete
  4. காவியல்ல, மனிதாபிமானமும் தைரியமும் கொண்ட எந்தவொரு மனிதனும் இதை செய்யத்தான் வேண்டும். ஆயினும் இதே காவிகள் தான் மியன்மாரில் இலட்சக்கணக்கான மக்களின் ஈவிரக்கமின்றிய சாவுக்கும் அனானதகளாவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள். அது சம்பந்தமான பெளத்த தர்மம் என்னவோ?

    ReplyDelete
  5. Well done! A humanitarian action of a true buddhist monk
    .

    ReplyDelete
  6. this monk saved 4 lives can you understand that ? think all 4 are from your family.

    ReplyDelete
  7. Well Done, We Respect your courage work to protect needy people.

    We Welcome Good and Dislike bad.. Regardless any group you come from.

    ReplyDelete

Powered by Blogger.