Header Ads



ஹம்பாந்தோட்டயை சுற்றி 4 நாடுகள் வட்டமடிப்பு - சீனா பற்றி சந்தேகமும் வெளியீடு


ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு குறித்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது கவனத்தை செலுத்தியுள்ளன.

இந்த தகவலை ரொயட்டர்ஸ் செய்திசேவை தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையினால், சீனாவிடம் கடந்த சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

99 வருட குத்தகை அடிப்படையில் இந்த துறைமுகம் சீனாவின் மேர்சன்ட்ஸ் போட் ஹோல்டிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த குறித்த துறைமுகம், சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு வெகுவாக உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

இந்தநிலையில் குறித்த துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதன் மூலம் இலங்கை அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 100 மில்லியன் டொலர்களை பெறக்கூடியதாக இருக்கும்

அத்துடன், ஆறு மாதங்களில் 585 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தமது கடற்படை நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியன தமது சந்தேகத்தை வெளியிட்டுள்ளதாக ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த துறைமுகத்துக்கு அருகில் உள்ள வானூர்தி தளத்தை பெற்றுக்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. வீணாப்போன அரசியல்வாதிகள் நாட்டின் நலனை முற்றாக மறந்து அவர்களின் சுகபோகத்திலும் களியாட்டத்திலும் நாட்டை அடகுவைத்து களியாட்டம் ஆடி நாட்டையும் நாட்டு மக்களையும் அடிமைகளாக மாற்றிய பெருமை இந்த வீணாப்போன அரசாங்கமும் அதன் அடிவருடிகளையும் சேரும். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு எமது நாட்டையும் நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தி இந்த நாட்டு மக்களை சீன சக்திகள் மிதிக்க ஆரம்பிக்கும்போது தான் இந்த வீணாப் போன அரசியல்சக்திகள் விளிக்க ஆரம்பிக்கும்.அச்சமயம் புகையிரதம் சென்றபிறகு கையைக்காட்டி என்ன பலன்!

    ReplyDelete

Powered by Blogger.