Header Ads



இலங்கையில் வருடாந்தம் 400 பேர், பாம்புக் கடியினால் மரணம்

இலங்கையில் ஆண்டுதோறும் பாம்பு கடிக்கு இலக்காகி 400 பேர் உயிரிழப்பதாக களனி பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆண்டுதோறும் 80,000 பேர் பாம்பு கடிக்கு உள்ளாவதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலை அறிக்கைகள், பாம்பு கடி பற்றிய தேசிய வீட்டு வசதி ஆய்வு ஆகியவற்றில் இருந்தே இந்த தகவல் திரட்டப்பட்டுள்ளன.

பாம்பு கடிக்கு இலக்காகியவர்களின் சிகிச்சைக்காக இலங்கை அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபாவை செலவிடுகின்றது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜானக டி சில்வா, சிரேஷ்ட பேராசிரியர் மருத்துவபீட டாக்டர் அனுராதானி, கஸ்தூரிரட்ண சிரேஷ்ட விரிவுரையாளர், தலைவர் பொதுச் சுகாதாரத்துறையினர் ஆகியோரைக் கொண்ட குழு இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.