Header Ads



இலங்கையில் ஆண்கள் 30.7 வீதமும், பெண்கள் 26.1 வீதமும் கணினியைப் பயன்படுத்துகின்றனர்

இலங்கையில் கணினிப் பாவனையானது 28.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 தொடக்கம் 69 வயதுக்கிடைப்பட்டவர்களை மையப்படுத்தி கடந்த 6 மாதங்கள் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இது தொடர்பில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நகர்புறங்களில் வசிப்பவர்கள் அதிகமாக கணனியைப் பயன்படுத்துவதுடன், ஆண்கள் 30.7 வீதமும்,பெண்கள் 26.1 வீதமான பெண்களும் கணினியைப் பயனபடுத்துவதாக தெரியவந்துள்ளது.

வயது அடிப்படையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களின் கணினிப் பாவனை அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சகல மாவட்டங்களையும் விட கொழும்பு மாவட்டத்தில் 44.6 வீதம் கணினி பாவனை காணப்படுவதாகவும்,மிகக் குறைந்தளவு கணினியைப் பயன்படுத்தும் மாவட்டமாக பதுளை மாவட்டத்தில் 4.9 வீதமானோர் கணினியைப் பயன்படுத்துவதாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.