Header Ads



ஜெரூசலேம் என்பது 3 மதங்களின், 2 இனங்களின் சொந்த பூமியாகும் - ஹக்கீம்


ஜெரூசலேம் என்பது மூன்று மதங்களின், இரண்டு இனங்களின் சொந்த பூமியாகும். அவ்வாறான பூமியினை ஒரு சாராரின் கைகளுக்கு மட்டும்கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள் என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன - இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு வெள்ளிக்கிழமை (22) மாலை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,

பலஸ்தீன தலைவர் யாசீர் அரபாத் இலங்கைக்கு வந்த நிலையில் அவரை நான் சந்தித்தேன். அப்போது நான் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிளிக்கும்போது, எனக்கு அவர் ஒரு விடயத்தைக் கூறினார். அதாவது யுத்தமொன்றை முன்னெடுக்க நாம் கடுமையாக போராட வேண்டும். எனினும் சமாதானத்தை வெற்றிகொள்ள அதைவிடவும் அதிகமாக போராட வேண்டும் என அவர் என்னிடம் கூறினார். இன்றும் அது என் மனதிலுள்ளது.

சமாதான நோக்கத்தில் தான் பலஸ்தீன அரசாங்கம் செயற்பட்டது. எனினும் இன்று சமாதானம் என்ற  கதவு துண்டு துண்டாக சிதறியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலான பேச்சுக்களையும் கவனத்தில் கொள்ளாது சர்வதேச நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்துள்ளன.

இதுவே பலஸ்தீனம் மீதான உலக நாடுகளின் ஒற்றுமையான ஒத்துழைப்புக்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் எந்த நிலையிலும் பலஸ்தீனத்தை ஆதரிப்போம் என்றார்.

9 comments:

  1. Why Sri Lankan Safafi groups that have been talking too much about Bida and shirk do not speak out about this aggression. This injustice of killing children in Palestine and why they do not talk. JP is silent and all leading salafi groups are silent . When Saudi does any injustice they do not talk. Why is it .

    ReplyDelete
  2. Abu Ateeq... No use of talk... We act.

    But you spend time talking only. Did you even send a peny to palestinian or syrian, miyanman refugee ? No need to tell us.. but your heart knows.

    Please stop making noise... but act...

    Now many leaders of Srilanka will used this topic in election gains.

    ReplyDelete
  3. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
    (அல்குர்ஆன் : 16:125)

    ReplyDelete
  4. For AbuAteeq...

    http://www.arabnews.com/node/1213771/saudi-arabia

    ReplyDelete
  5. Salafis are waiting for the orders and permission from their lord and Funder Saudi arabia.

    ReplyDelete
  6. பலருக்கும் சொந்தமான பூமி என்பது பிழையான கருத்தாகும்,பாலஸ்தீனம் முஸ்லிம்களுக்கு சொந்தமான பூமியாகும்.

    ReplyDelete
  7. Salafies Load is Allah and Founder of Saudi and All Universe is also Allah.

    So Salafies will wait for Allah's permission...

    If you do not agree with the choice of salafies.....

    Feel sorry for your future.

    ReplyDelete
  8. Political bussiness now come through the Islamic law and culture.
    Do not use Islam as political weapon.
    This is for all politicians
    Please......
    Because I don’t think so,
    Politicians’ intention will not about Islam.

    ReplyDelete

Powered by Blogger.