Header Ads



புறக்கணிப்பு முடிந்தபோதும், வழமைக்குவர 2 நாட்கள் ஆகும்

தொடரூந்து பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளபோதும், தொடரூந்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம இதனைத் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவர்கள் சேவைக்கு திரும்புவதன் அடிப்படையில், தொடரூந்து இயக்கப் பணிகளை முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒருவாரகாலமாக முன்னெடுத்த பணிப்புறப்பு போராட்டத்தை தொடரூந்து தொழிற்சங்கத்தினர் இன்று விலக்கிக்கொண்டனர்

அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தொடரூந்து தொழிற்சங்கத்தினர் இந்தத் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

வேதன பிரச்சினைக்கான தீர்வு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து, பணிப்புறக்கணிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை முற்பகல் தொடக்கம் உரிய நேர அட்டவணைக்கு அமைய தொடரூந்தை சேவையில் ஈடுபடுத்த இயலுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பணிப்புறக்கணிப்பை மேற்கொண்ட தொடரூந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.