Header Ads



நாடுமுழுவதும் 2 கோடி மரக்கன்றுகள் - அத்துரலிய தேரருடன் டில்சான் கைகோர்ப்பு

2019 ஆம் ஆண்டு நாடுமுழுவதும் 2 கோடி மரக்கன்றுகளை நடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

“ உலகை குணப்படுத்தும் தினம் ”  வேலைத்திட்டம் தொடர்பாக  தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு கோட்டை சேமா நிறுவனத்தில் இன்று (28) இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சகல பிரஜைகளும் ஏதாவது ஒரு தாவரத்தை நடுவது அவசியம் என்றும், எதிர்காலத்தில் முகங்கொடுக்கவுள்ள சுற்றாடல்  மாற்றத்துக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கபடும் ஆன்மிக வேலைத்திட்டமானது ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இது 66 உலக நாடுகளில் நடைபெறவுள்ளதாகவும் ” தேரர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்சான், சேமா நிறுவனத்தின் தலைவர் அசோக அபயகுணவர்தன உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

2 comments:

  1. அரச மரம் என்டு சொல்லுங்களன்.

    ReplyDelete
  2. மனதில் விஷ வித்துக்கள்
    மண்ணில் மரக் கன்றுகள்!
    விதைப்பதை அறுக்கும் விதி
    விதிவிலக்கின்றி வரும் ஒருநாள்!!

    ReplyDelete

Powered by Blogger.