Header Ads



2 பேரை கொன்றவனுக்கு, பழங்கள் கொடுத்து வழியனுப்பிய மக்கள்

நவ­கத்­தே­கம உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பாரி­ய­ளவில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தி இரு­வரின் உயி­ரி­ழப்­புக்கும் கார­ண­மாக இருந்த காட்டு யானை வன­வி­லங்குத் துறை அதி­கா­ரி­களால் பிடிக்­கப்­பட்டு ஹொர­வப்­பொத்­தனை யானை பாது­காப்பு நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

நவ­கத்­தே­கம ரம்­ப­க­ன­யா­கம பிர­தே­சத்தில் வன­வி­லங்குத் துறை அதி­கா­ரிகள் சில தினங்­க­ளாக மேற்­கொண்ட முயற்­சியின் பின்னர் இந்த யானை பிடிக்­கப்­பட்­டது. பின்னர் இந்த யானை வன­வி­லங்குத் துறை அதி­கா­ரி­களின் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் ஹொர­வப்­பொத்­தானை பிர­தே­சத்­துக்கு எடுத்துச் செல்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

குறித்த யானையின் தாக்­கு­த­லினால் இருவர் இப்­பி­ர­தே­சத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு, பலர் இதன் தாக்­கு­த­லினால் பலத்த காயங்­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்­ள­தோடு, ஏரா­ள­மான விவ­சாய செய்­கை­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சிலர் இந்த யானையின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கினர்.

இந்த யானை மக்­க­ளுக்கு பெரும் தொல்­லை­களை வழங்கிய போதிலும் அந்த யானை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அம்மக்க ளால் அதற்கு வாழைப்பழம் மற்றும் பழவகைகளும் வழங்கப்பட் டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.