Header Ads



27 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக


வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால், கை சின்னத்துடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி 27 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக அந்தச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

எதிர்காலத்தில் எல்லா தேர்தல்களையும் கை சின்னத்திலேயே போட்டியிடுவது என்றும் அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.

சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கு மாத்திரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியை அமைக்கவுள்ளது. இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு அடுத்தவாரம் கையெழுத்திடப்படும்.

ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட இணங்கியுள்ளது.

எனினும் கை சின்னத்தில் போட்டியிடவது சாதகமற்றது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

நுவரெலிய மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கூட்டணியின் கீழ் சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.