Header Ads



248 உள்­ளூ­ராட்­சி­ சபைகளுக்கு, நாளை வேட்­பு­ம­னுத்­தாக்கல் ஆரம்பம்

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 248 க்­கான வேட்­பு­மனு  தாக்கல் செய்யும் நட­வ­டிக்கை நாளை -18- ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் எதிர்­வரும் வியாழக்கிழமை நண்­ப­க­லுடன் அது நிறை­வ­டை­ய­வுள்­ளது.

நாடு தழு­விய ரீதியில் அமைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 341 இல் 93 சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்யும் அறி­வித்தல் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. அதற்­கி­ணங்க குறித்த சபை­க­ளுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் கடந்த 11 ஆம் திகதி ஆரம்­ப­மா­ன­துடன் 14 ஆம் திகதி நண்­ப­க­லுடன் நிறை­வுக்கு வந்­தது.

இதே­வேளை வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்­வ­தற்­கான அறி­வித்தல் கடந்த நான்காம் திகதி வெளி­யான உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 248 இற்­கான வேட்பு மனுத்­தாக்கல் செய்யும் நட­வ­டிக்கை நாளை ஆரம்­ப­மா­வ­துடன் எதிர்­வரும் 21 ஆம் திகதி நண்­ப­க­லுடன் நிறை­வுக்கு வர­வுள்­ளது. 

எனவே நாளை முதல் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை நண்­பகல் வரையும் வேட்பு மனுத்­தாக்கல் செய்­யப்­பட வேண்­டி­யுள்ள 248 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­மனு தயார் செய்யும் பணியில் கட்­சிகள் மும்­முரம் காட்டி வரு­கின்­றன. இதே­வேளை குறித்த சபை­க­ளுக்­கான வேட்பு மனுத்­தாக்கல் செய்­யப்­பட்ட பின்­னரே தேர்தல் நடை­பெறும் தினம் பற்­றிய உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை­யூ­டாக இம்­மு­றை­ந­டை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கென 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அம்­மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இறு­தி­யாக விகி­தா­சார முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது நாட்டில் முன்­னூற்று முப்­பத்­தைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருந்­த­துடன் அம்­மன்­றங்­க­ளுக்கு நான்­கா­யி­ரத்து நானூற்று எண்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

ஆகவே புதிய தேர்தல் முறை­யூ­டாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கடந்த தேர்­த­லை­விட ஆறு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மேல­தி­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கி­ணங்க அக­ர­ப­தன, கொட்­ட­கல, மஸ்­கெ­லிய, நோர்வூட், பொல­ந­றுவை ஆகிய பிரதேச சபைளும் பொலநறுவை மாநகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே தற்போது நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.