Header Ads



டி20 போட்டியில் 18 சிக்ஸர்கள் விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை

பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடிய கிறிஸ் கெய்ல், 18 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்ததுடன் 69 பந்துகளில் 146 ரன்கள் அடித்தார்.

மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெய்ல், 2013-ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டி ஒன்றில் 17 கிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

அத்துடன் ஐந்து பவுண்டரிகளையும் அடித்த அவர், டி20 இறுதி போட்டியில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ரங்க்பூர் ரைடர்ஸ் அணி, டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுக்க கிறிஸ் கெய்ல் உதவினார்.

கிறிஸ் கெய்லும், முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலமும் இணைந்து 201 ரன்கள் குவித்தனர். மெக்கலம் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

11 ஆட்டங்களில் 485 ரன்கள் எடுத்து, இந்த வருட பங்களாதேஷ் பிரிமியர் லீகில் அதிக ரன்கள் எடுத்த வீரராக கிறிஸ் கெய்ல் உள்ளார். இவரது சராசரி 54, ஸ்டிரைக் ரேட் 176 ஆகும்.

கெய்ல் அடித்த 146 ரன்கள், டி20யில் அவரது 10-ஆவது அதிகபட்ச ரன்னாகும். ஐபில்-லில் பெங்களூரு அணிக்காக கெயல் அடித்த 175 ரன்கள், டி20யில் அவர் அடி அதிகபட்ச ரன்னாக தொடர்கிறது.

No comments

Powered by Blogger.