Header Ads



மைத்திரிபாலவின் சகோதரர் படுகொலை, குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு 18ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தினம் 30.11.2017 நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இஷான் லக்மால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொலை செய்யப்பட்ட பிரியந்த சிறிசேனவின் மனைவிக்கு பத்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் நீதிமன்றத்துக்கு அபராதத் தொகையாக 20 ஆயிரம் ரூபாவும் செலுத்துமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நஷ்டஈட்டுத் தொகையை செலுத்தத் தவறினால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனையும், அபராதத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஆறுமாத சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி நிமல் ரணவீர தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Thanudeen was killed long time ago this incident, but there is no justice yet?????

    ReplyDelete

Powered by Blogger.