Header Ads



10 ஓவர் புதிய ரிக்கெட் தொடர் அறிமுகம் - பாகிஸ்தானில் முதல் போட்டி - கொழும்பு லயன்சும் பங்கேற்பு


கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்குடன் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றுமொரு கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரே அதுவாகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு,  இத்தொடரில் 6 அணிகள் விளையாடுகின்றன.

மரதா அரபியன்ஸ் , பஞ்சாபி லெஜன்ட்ஸ் , பக்டுன்ஸ் ஸ்கொட் , கேரளா கிங்ஸ்  பெங்கால் டைகர்ஸ், இலங்கையின் கொழும்பு லயன்ஸ் உள்ளிட்ட அணிகள் தொடரில் விளையாடுகின்றன.

கொழும்பு லயன்ஸ் அணியை தினேஸ் சந்திமால் வழிநடத்தவுள்ளார்.

கசுன் மதுஷங்க , ஜெப்ரி வன்டர்சே, வனிந்து ஹசரங்க, சச்சித்திர சேனாநாயக்க, கிந்ருவன் விதானகே, அலங்கார அசலங்க ஆகியோர் கொழும்பு லயன்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் வரவேற்பு நிகழ்வு இன்று -14- கோலாகலாக ஆரம்பமாகவுள்ளது.

பெங்கால் டைகர்ஸ் மற்றும் கேரளா கிங்ஸ் அணிகள் தொடரின் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2 comments:

  1. கிரிக்கெட்டை ஒழும்பிக்கில் அறிமுகம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இந்த 10 ஓவர் அறிமுகம் செய்யப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.