Header Ads



அமைச்சரின் நாக்கை வெட்டினால், 1 கோடி பரிசு

மதச்சார்பற்றோர் பற்றி சர்ச்சை கருத்தினை கூறிய மத்திய மந்திரியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.1 கோடி தரப்படும் என கர்நாடக முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் கூறியுள்ளார்.

மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் இருந்து 5 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், மதச்சார்பற்றவர்கள் என தங்களை பற்றி கூறி கொள்பவர்களை நான் எப்படி அழைப்பது என தெரியவில்லை. தங்களது பெற்றோர் வழி பற்றி அறியாதவர்களே தங்களை மதச்சார்பற்றவர்கள் எனக்கூறி கொள்கின்றனர்.  அவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது.  அவர்களுக்கு பெற்றோர் வழி பற்றியும் தெரியாது என தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவின் கலபுரகி பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான குருஷாந்த் பதிதார், மத்திய மந்திரி ஹெக்டேவின் நாக்கை வெட்டுபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒரு மாதத்திற்குள் அவரது நாக்கை வெட்டிக் கொண்டு வருவோருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். அவரது கருத்து தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மதச்சார்பற்ற மக்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பை ஹெக்டே சிறுமைப்படுத்தி உள்ளார் என குற்றம் சாட்டினார்.

No comments

Powered by Blogger.