November 25, 2017

திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம் - YM. ஹனிபா

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை தொடர்பாக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் பரிபாலன சபையினால் தற்காலத்தில் இடம்பெற்று வருகின்ற முன்னெடுப்புக்கள், நிலைப்பாடு தொடர்பாக பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா நேற்று 24.11.2017ம் திகதி ஜும்ஆத் தொழுகையின் பின்னர்  மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஊடக அறிக்கையினை  வெளியிட்டார்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக்கான கோரிக்கையும்,  தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற  தொடர்ச்சியான போராட்டங்களும் இம்மக்கள் அனுபவித்த தொடர்ச்சியான மிக மோசமான ஏமாற்றங்களின் பிரதிபலிப்பாகும் என்பதை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் யார் என்ன சாயம் பூச நினைத்தாலும், இன்ஷாஅல்லாஹ், எமது இந்தப் போராட்டம்,  இக்கோரிக்கை சாத்தியமாகும் வரை எவ்வித சவால்களைச் சந்திக்க வந்தாலும்   ஓயமாட்டாது என்பதை உறுதியாகத் தெரிவிப்பதுடன், தொடர்ந்தும் ஏமாற்ற நினைத்தால் விபரீதங்கள் இன்னும் மோசமடையலாம் என்கின்ற எச்சரிக்கையினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் எங்களது வாக்குகளைப் பெற்றுச் சென்று, இன்று அரசியல் அதிகாரம் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் இப்பிரச்சினை சம்பந்தமாகக் கதைக்காமலும், வேறுசிலர் எதிராகக் கதைப்பதுமே எமக்கு மேலும் ஏமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள், இவர்களது நிலைப்பாட்டை கூடிய விரைவில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.

எமது  இந்தப் போராடத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக இனவாதச் சாயம்  பூசி, எங்களது போராட்டத்தை அடக்க நினைக்கின்றனர். எமது வாக்குகளைப் பெற்றுச் சென்று, நம்பிக்கைத்துரோகம் இளைத்துவிட்டு, எல்லாம் வல்ல இறைவனின் உதவியுடந்தான் இம்மாபெரிய போராட்டத்தினை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றோம். குரலற்று, ஏமாற்றப்பட்டு விரக்தியின் உச்ச நிலைக்குச் சென்றுள்ள எங்களுக்காக யாரும் குரல் கொடுக்கலாம். அது அவர்களது உரிமை. ஆனால், இதனை விமர்சிப்பவர்களுக்குக் காணப்படுகின்ற தார்மீகப் பொறுப்பு என்ன என்கின்ற கேள்வியினைக் கேட்க விரும்புகின்றோம். அதைவிடுத்து எமது நியாயமான கோரிக்கையை எவ்வாறு  நிறைவேற்றித் தரலாம் என்பதைப் பாருங்கள். எமது பிரச்சினையில் தயவு செய்து அரசியல் செய்ய வரவேண்டாம். இதனையும் எங்களால் அடையாளம் காண முடியாத அளவுக்கு நாங்கள் புத்தி குறைவானவர்கள் அல்லவென்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.

பெரும்பாலான அரசியல் தலைவர்கள் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்குவதை ஏற்றுக் கொண்டுள்ள அதே நிலையில், உள்ளூராட்சி சபையைக் கேட்டு நிற்கின்ற சாய்ந்தமருதையும்  ஏனைய பிரதேசங்களையும் ஒரேவிதமாக நோக்க வேண்டாமென்கின்ற ஒரு கோரிக்கையையும் முன்வைக்க விரும்புகின்றோம். புள்ளிவிபரவியல் ரீதியாகவும், பல ஆதாரங்கள் ரீதியாகவும் கல்முனையின் இருப்பினை நிரூபித்துக் காட்டியும், வேலைக் கள்ளிக்குப் பிள்ளைச்சாட்டு என்பது போன்று கதைப்பவர்களிடம் எவ்வாறு அணுகுவது என்பது ஒரு கேள்விக்குறியே? நான்காகப் பிரிப்போம், பிரிப்போம் என்று  முன்னர் கொண்டு வந்த திட்டத்தினை எதிர்த்து கடந்த மாதத்திலிருந்து ஆதரித்தவர் கூட, இன்று அதற்கும் விருப்பமில்லாத நிலைப்பாட்டுடன் காணப்படுவதற்கான காரணங்கள் தான் என்ன? இவர்களின் பின்னால் மறைந்து கிடக்கின்ற அரசியல் நிகழ்ச்சி நிரல் என்னவென கல்முனை வாழ்மக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்தவேண்டும். எனவே, எல்லா அரசியல் தலைவர்களிடமும் மிக வினயமாக வேண்டுவதென்னவெனில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையையும் நிறைவேற்றி, ஏனையவர்களின்  அபிலாசைகளையும் நிறைவேற்ற வேண்டுமென மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும், இலங்ககையின் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பள்ளிவாயல் சமூகம் முன்னோக்கி எடுத்துச் செல்கின்ற இப்போராட்டத்தினால் பல கோடிக் கணக்கான ரூபாய்களை நாம் இழந்து நிற்கும் நிலையில், எங்களை ஒரு அனுதாபக் கண்ணோட்டத்துடன் பார்க்குமாறு  மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம். மாறாக, எமது மக்களின் உண்மையான அபிலாசைகள், கோரிக்கைகள் என்பவற்றைத் தெரியாமலும், அதன் நியாயத் தன்மை புரியாமலும் கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள், எங்களுடன் வந்து கதைத்து விளங்கிக் கொண்டு, தமது கருத்துக்களை முன்வைக்குமாறு மிகப் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இப்போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கெதிரான போராட்டமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனெனில் இக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு,   கடந்த செப்டம்பர் மாதம்  சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இத்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரே சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்படவுள்ளதெனக் குறிப்பிட்டார். அப்பொழுது, இது கல்முனைக்குடி வாழ்மக்களுக்கு எதிரான போராட்டமாக அவருக்கு அன்று தெரியவில்லையா? இன்று இவரால் கூறப்படுகின்ற கல்முனை நகரத்தின் பாதுகாப்புப் பற்றிய பிரச்சினை அன்று அவருக்குப் புரியவில்லையா? அன்று இதனைக் கூறுகின்ற  போது தெரியாமல் போனதன் மர்மம் என்ன? எனவே, எங்களது சகோதர உள்ளங்களுக்கு எதிராக நாம் ஏன்  போராட வேண்டும். எங்களது ஊரில் இருந்து 3000 இற்கு மேற்பட்ட சகோதர்கள் அங்கு திருமணம் முடித்துள்ளனர். அதேபோண்று 1200இற்கு மேற்பட்ட சகோதர்கள் இங்கு திருமணம் முடித்துள்ளனர். இவாறானதொரு பிணைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் ஏன் உங்களுக்கு எதிராகப் போராட வேண்டும். எமது உரிமையைக் கேட்டே நாம் போராடுகின்றோம். நாம் மிக மோசமாக ஏமாற்றப்பட்ட நிலையிலையே எமது போராட்டத்தை ஆரம்பித்தோம். 2015ஆம் ஆண்டில்  கல்முனையில் இடம்பெற்ற   பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலிருந்து, திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். சாய்ந்தமருதில் இருந்து கொழும்பிற்கும், ஒலுவிலுக்குமென்று பலமுறை பந்தாடப்பட்டுள்ளோம். இவ்வாறு உங்களுக்கு நடந்தால் ஒரு தன்மானமுள்ள சமூகம் என்கின்ற ரீதியில் பொறுமையாக இருப்பீர்களா? நாம் 42 கூட்டங்களுக்காகப் பந்தாடப் பட்டுள்ளோம்.          

எனவே நாம் மீண்டும் மீண்டும் தலைவர்களிடம் கேட்பதெல்லாம், எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பற்றுங்கள். அதுதான் எமது எதிர்பார்ப்பு ஆகும். மாறாக காலம் தாழ்த்தி எமது போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். இதனால் ஏற்படப் போகின்ற சகல பின்விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்புக் கூறவேண்டும். வாக்களித்த எங்களின் அமானிதத்தைக் காப்பாற்றுமாறு இப்பள்ளிவாயலில் இருந்து கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு நிறைவேற்றாமல் விட்டால், நீங்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் கடனாளிகளாய் மரணிப்பீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இதற்காக இவ்வுலகிலும், மறுமையிலும் நீங்கள் ஒவ்வொருவரும்  இன்ஷாஅல்லாஹ் பதில் கூறியே ஆகவேண்டும்.  

மேலும் தெரிவித்த தலைவர் இவ்விடத்தில் நாங்கள் ஒன்றை மட்டும் உறுதியாக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது எமது போராட்டம் ஒவ்வொரு நாளும் புது வடிவம் பெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பினரும் முன்வந்து இப்போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அதில் முக்கிய படிக்கட்டமாகவே, இன்று எம்முடன் எமது சமூகத்தின் முக்கிய தூண்களான மாட்டு வண்டில் சங்கமும், அதன் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்னும் எதிர்காலத்தில் மேலும் பலர் இணையவுள்ளனர்  என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

Y M ஹனிபா (Sir) அவர்களே, இந்த பிரதேச சபை விடயத்தை மித மிஞ்சிய போராட்டமாக பிரதேசவாதத்தை ( ஊர்த்துவேசத்தை) ஊற்றி பொறுப்பு மிக்க பள்ளிவாசல் தலைவர் (மரைக்கார் சபை தலைவர்) பதவியை மதிப்பிறக்கம் செய்துள்ளீர்கள். நாறடித்துள்ளீர்கள். சாய்ந்தமருது மக்களையும் கல்முனைக்குடி மக்களையும் பகைவர்களாக மாற்றியுள்ளீர்கள். இப்பிரதேசத்தின் உமது மரைக்கார் சபை தலைமைத்துவம் மாபெரும் கரும் புள்ளி. கல்முனைக்குடியும் சாய்ந்தமருதும் ஓரே ஊர்தான். அந்த ஒரே ஊரை நீங்கள் இரண்டாக பிரித்து விட்டீர்கள். தமிழர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ( சாய்ந்தமருதையும் கல்முனைக்குடியையும் ஒரே பிரதேச சபையாக மாற்றுங்கள் என்று). அப்போது விளங்கும் உங்களுக்கு இதன் சூட்சுமம். உங்களுக்கு இது புரியாமல் இல்லை புரியும், புரிந்தும் நீர் குற்றம் சாட்டும் அரசியல் வாதிகளை விட மாபெரும் அரசியல் செய்கிறீர்கள். நீங்கள். ஆசிரியராய் இருக்கும் போதே மாபெரும் அரசியல் புரிந்தவர். அங்கு நீங்கள் படிப்பித்ததை விட அரசியல் செய்ததே அதிகம். UNP மேடைகளில் ஏறி அரசியல் பேசியவர் அல்லவா நீங்கள்.
அடுத்த மிகவும் முக்கியமான விடயம்... இந்த பிரதேச சபை விடயத்தில் எதிர் கருத்துள்ளவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளீர்கள் அதாவது பள்ளிவாசலைவிட்டும் ஒதுக்கி வைப்பீர்கள் என்பது தானே இதன் அர்த்தம்.. அதாவது அவர் மௌத்தானால் உங்கள் ஊரால் மையத்து தொழுகை தொழுவிக்க மாட்டீர்கள் என்பதுதானே அர்த்தம். ஊரே நாறும். அதாவது உங்கள் முடிவு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கும் சரியத்துக்கும் சவால் விடுவதாக உங்கள் மனம் உறுத்த வில்லையா?
பள்ளிவாசல்களை தரம் கெட்டவர்கள் நிர்வகிப்பார்கள் இது உலகம் அழிவதட்கான அறிகுறியாகும். உங்கள் நிர்வாகத்தில் அது நிரூபணமாகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இந்த பிரச்சினையை மூடிய கதவுக்குள் இந்த பிரதேசத்தின் ( கல்முனைக்குடி, சாய்ந்தமரம், மருதமுனை, நாப்பட்டிமுனை, இஸ்லாமாபாத் போன்ற அனைத்து ஊர்களினதும்) நன்மை கருதி ( அரசியல் பலம், பொருளாதாரம், பாதுகாப்பு, நிர்வாக சேவைகள்,....etc.) புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், மரைக்கார் சபையும் ( உங்களை தவிர ஏனென்றால் நீங்கள் மாபெரும் அரசியல் வாதி, பெரியாள் பத்தும் குணம்) சேர்ந்து பேசி தீர்க்கலாம். அரசியல் வாதில்கள் இதில் வேண்டாம்.

Note: கல்முனை மாநகரசபை பிரிக்கப்படாமல் தற்போதுள்ளபடியே இருப்பதுதான் இப்பிரதேசத்தின் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் பலமும் இலாபமும் ஆகும். அதட்காக மேயர் பதவியை கல்முனைக்குடி எவ்வளவு காலத்துக்கும் ( ஆயுளுக்கும் ) சாய்ந்தமுருதுக்காக விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை என்பதுவே எமது கருத்தாகும்.

எனது கருத்தும் இதுவே

Post a Comment