Header Ads



வைத்திய கலாநிதி YLM யூசுப், சடடத்தரணி ஆனார்

இலங்கையில்  தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வைத்திய கலாநிதியாகவும், சடடத்தரணியாகவும் பணிகளை ஆரம்பித்துள்ள வைத்திய கலாநிதி வை.எல். எம்.யூசுப்.

கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  யூனுஸ் லெவ்வை முகமட்  யூசூப் எனும் இவர்  கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று மருத்துவத்துறையில்  பட்டத்தினை (MBBS) பூர்த்தி செய்ததை தொடர்ந்து,  கொழும்பு தேசிய வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றினார்.

இதனை  தொடர்ந்து தற்போது கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில்  (Lady Ridgeway Hospital ) கடமையாற்றி வருகின்ற இவர் கடந்த வருடம் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில்  சட்டத்துறை பட்டப்படிப்பினை (LLB) முடித்திருந்தார். அதே வேலை தற்போது கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டத்தரணி  படிப்பினையும் (Attorney at Law) முடித்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட  இரு துறையிலும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த  இலங்கையர் எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( அப்துல் அஸீஸ்)

2 comments:

  1. Maha Allah
    Please study further and become a Consultant in Judicial Medicine
    Don't never ever forget that you are a Muslim

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,,,, உன்னால் என் கல்முனை தாய் மண்ணுக்குப் பெருமை,,

    ReplyDelete

Powered by Blogger.