Header Ads



எமது ஜனாதிபதியை, நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம், முடிந்தால் UNP +TNA ஆட்சியமைக்க சொல்லுங்கள்

தேசிய அர­சாங்­கத்தில் உள்ள எமது உறுப்­பி­னர்­களை மீண்டும் எமக்குத் தாருங்கள். எமது ஜனா­தி­ப­தியை நாங்கள் பார்த்­துக்­கொள்­கின்றோம் என்­கிறார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ.  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஐக்­கிய தேசி யக் கட்சி ஆட்­சி­ய­மைக்கும் வரையில் தான் நாமும் வேடிக்கை பார்த்­து­க்கொண்­டுள் ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அஹுங்­கல்ல,பொளி­ம­த­ரா­ரா­மய விகா­ரையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன் றில் கலந்­து­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில். 

பொது எதி­ர­ணி­யுடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முன்­வந்­துள்­ளது. அதற்­கமைய பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரு­கின்­றன. எமது சார்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி குழு­வி­ன­ரு டன் கலந்­து­ரை­யாட மூன்­றுபேர் கொண்ட குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. எமது பாரா­ளு­மன்றக் குழு மூல­மாக மூன்று பேர் கொண்ட பிரத்­தி­யேக குழு­வி­னை நாம் அமைத்­துள்ளோம். அவர்­க­ளுக்கு பொறுப்­பு­களை ஒப்­ப­டைத்­துள்ளோம். அவர்­க­ளது பொறுப்பை சரி­யாக செய்து வரு­கின்­றனர். கூட்­டத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலை எமக்கு தெரி­வித்து வரு­கின்­றனர். 

எனினும் சில பெளத்த தேரர்கள் மற்றும் ஒரு­சில அர­சியல்வாதிகள் கூறு­கின்ற கதைகள் வேடிக்­கை­யாக உள்­ளன. பிர­தமர் பத­வி­யையோ அல்­லது எதிர்க்­கட்சித் தலைமைப் பத­வி­யையோ பெற்­றுக்­கொள்ள குறுக்­கு­வ­ழியை தேட­வில்லை. அவ்­வாறு பெற்­றுக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. அவர்கள் கொடுத்­தாலும் அதனை நான் பெற்­று­கொள்­ளப்­போ­வதும் இல்லை. சிலர் பொய்­யான கருத்­துக்­களை முன்­வைத்து என்னை அவ­ம­தித்து வரு­கின்­றனர். இன்று என்னை விமர்­சிக்கும் சிலர் பற்றி எனக்கு  நன்­றா­கவே தெரியும். அன்று எனது ஆட்­சியில் அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட பிரச்­சி­னை­களில் இருந்து விடு­விக்க தினமும் அல­ரி­மா­ளி­கையில் வந்து நிற்கும் நபர்கள் இவர்கள். 

கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது எதி­ர­ணி­யுடன் இணைந்தால் ஐக்­கிய தேசியக் கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்­சியை அமைக்கும் என கூறு­கின்­றனர். அவ்­வாறு நடந்தால்?

பதில்:- அதைத்தான் நாமும் எதிர்­பார் க்­கின்றோம். முடிந்தால் அவர்களை இணைத்து ஆட்சியமைக்க சொல்லுங்கள். எமது உறுப்பினர்களை எமக்குத்தாருங்கள்.அப்போது எமக்கு பலத்தினை நிரூபிக்க முடியும். எமது ஜனாதிபதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்றார்.

1 comment:

Powered by Blogger.