Header Ads



சிலரின் யோசனைகளை ஆதரித்திருந்தால், இன்று நானும் Mp ஆக இருந்திருப்பேன் - கீதா

தம்மை இலகுவில் வீழ்த்திவிட முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

திட்டமிட்ட அடிப்படையில் ஒரு சிலர் அரசியலிலிருந்து என்னை ஓரம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.

எனினும் என்னை வீழ்த்துவதற்கு எவராலும் முடியாது. நாளை முதல் எனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பேன். பென்தர அல்பிட்டியவில் வீடு வீடாக சென்று கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வேன். நான் மஹிந்தவுடன் இணைந்து கொண்டு பிரச்சாரம் செய்வேன்.

வழக்கு தீர்ப்பு தொடர்பில் நான் மனம் தளரப் போவதில்லை. நான் அரசியலுக்கு பிரவேசித்து சுவிட்சர்லாலந்து குடியுரிமையையும் இழந்துவிட்டேன்.

அரசியலில் இறங்கி நான் சொத்துக்களையும் இழந்துவிட்டேன். எனக்கு நேர்ந்த இந்த நிலைமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கவலைப்படுகின்றனர்.

சிலர் கொண்டு வந்த யோசனைகளை நான் ஆதரித்திருந்தேன் என்றால் இன்று நானும் நாடாளுமன்றில் அங்கம் வகித்திருப்பேன் என அவ ர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.