Header Ads



தாஜுதீன் கொல்லப்­பட்ட தினம், அல­ரி­மா­ளி­கை­யிலிருந்து சென்ற Call ­களை இன்னும் கண்­டு­பி­டிக்கவில்லை

கோப் குழு உறுப்­பி­னர்­களின் தொலை­பேசி உரை­யா­டலை கண்­டு­பி­டிக்க முடி­யு­மான குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தாஜுதீன் கொலை­செய்­யப்­பட்ட தினம் அல­ரி­மா­ளி­கை­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட தொலை­பேசி உரை­யா­டல்­களை இன்னும் கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போயுள்­ளது என கொழும்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்சி கொலன்­னாவ அர­சியல் தொகுதிக் கூட்டம் நேற்று முன்­தினம் மாலை கொலன்­னாவ மங்­க­ல­பாய கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. ஐக்­கிய தேசியக் கட்சி கொலன்­னாவ தொகுதி அமைப்­பா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ். எம்.மரிக்கார் தலை­மையில் இடம்­பெற்ற கூட்­டத்தில் அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், ஐக்­கிய தேசியக் கட்சி கடந்த 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக எதிர்க்­கட்­சியில் இருந்­துள்­ளது. 2015 நாங்கள் மேற்­கொண்ட பாரிய முயற்­சி­யினால் அதி­கா­ரத்­துக்கு வர முடிந்­தது.

அன்று நாடு பொரு­ளா­தார ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­த­துடன் சர்­வ­தேச மட்­டத்தில் நாங்கள் ஒதுக்­கப்­பட்­டி­ருந்தோம்.  இந்­நி­லையில் நாங்கள் தனித்து ஆட்­சி­செய்ய அதி­காரம் இருந்­தாலும் அனைத்துக் கட்­சி­க­ளையும் இணைத்துக் கொண்டு ஆட்­சி­ய­மைப்­பதன் மூலமே நாட்டைப் பாது­காக்­கலாம் என்று தேசிய அர­சாங்­கத்தை அமைத்தோம்.

தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதால் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு எங்­களால் போது­மா­ன­ளவு உத­வி­களைச் செய்ய முடி­ய­வில்லை என்ற குறை இருக்­கின்­றது, என்­றாலும் சர்­வ­தேச மட்­டத்தில் ஒதுக்­கப்­பட்­டி­ருந்த நாட்டை, அனைத்து நாடு­க­ளாலும் அங்­கீகரிக்கும் நிலைக்கு கொண்டுவர முடியுமாகியுள்ளது. அதேபோன்று பொருளாதார அபி விருத்தி மேற்கொள்வதற்கு தேவை யான அடித்தளத்தை அமைக்கக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

எம்.ஆர்.எம்.வஸீம்)

3 comments:

  1. தயவுசெய்து உங்களின் கீழ்த்தரமான அரசியல் வியாபாரத்திற்காக பயணித்த உடல்களை மீண்டும் மீண்டும் தோண்ட வேண்டாம்... இந்த நல்லாட்சி எனும் கள்ளாச்சியில் நீங்கள் மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதியை மீண்டும் மீண்டும் புதுப்பொலிவுடன் வழங்காமல் வேறு ஏதாவது முறையில் வியாபாரம் செய்யுங்கள்.. இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் வாதிகளையும் கொலையாளிகளையும் பாதுகாக்கும் அரசாகும்...தாஜுடீனின் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடுங்கள்...

    ReplyDelete
  2. Mujibur Rahman is blaming himself(UNP). If joint opposition is smart to expose your wrongdoings (central bank bond issue), why cannot you (UNP) do the same.

    ReplyDelete

Powered by Blogger.