Header Ads



ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாக, வாழ வேண்டும் - ஐக்கிய நாடுகள் சபை


மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றுவரும் ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்தார்.

ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என ஆங் சான் சூகியிடம் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியதாக  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. Rohingyans are living peacefully in myanmar, so UN please don't interrupt in myanmar internal isuue.
    Nyanmar govt has targeted the islamic terroist groups in the state and still they are are fighting against the terrorism only.
    There is no attrocities particularly against Rohingyans.
    Last month, 88 hindu bodies have been found in State of Rakiya where rohingyans live, conduct the investigation against that attocities done by the islamic terrorist groups

    ReplyDelete
  2. டேய் அனுசாத் - ஒனக்கென்னடா மண்டை கொழம்பிப் போச்சுதாடா?

    இத்தனை அலட்சம் ரேகிங்கிய முஸ்லீமகள் அகதியா வந்திருக்கிறது அவங்கள்ள பலபேர் கொலைசெய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு மானபங்கப்படுத்தப் பட்டிருப்து - இது எல்லாம் ஒன்ர மண்டையில படையில்லையாடா அனுசாத் ??

    ReplyDelete
    Replies
    1. அபூதாஹிர்!
      இவனது தமிழ் சனம் முள்ளிவாய்க்காலில் சின்னாபின்னப்படுத்தப்பட்டபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்திருப்பான். அல்லது பைத்தியமாக அலைந்திருப்பான். இதனால் இனச்சுத்திகரிப்பை மட்டுமே நோக்கமாக கொண்டு உளறும் இவன் அதன் வலியை உணரமாட்டான்.
      பைத்தியங்கள் அவ்வாறுதான்.

      Delete
  3. Anusath உன் சுட்டு விரலால் அடுத்தவரை குற்றம் கூறுகையில் மற்ற மூன்று விரலும் உன்னை காட்டுது என்பதை மறந்து விடாதே.

    ReplyDelete

Powered by Blogger.