Header Ads



தன்னினச் சேர்க்கைக்கு, நல்லாட்சியில் பச்சைக்கொடியா..?

இலங்கையில் தன்னினச் சேர்க்கை, இருபால் உறவு போன்ற பாலியல் செயற்பாடுகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான முயற்சிகளை அரசு ஆரம்பித்துள்ளது. ஐ.நா.வின் ஆலோசனைப்படியே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா.வின் மனித உரிமைகள் மீதான சீராய்வுகளின்போது, இலங்கையில் தன்னினச் சேர்க்கை உட்பட முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் கேள்வி எழுப்பின.

இலங்கையின் சட்டங்களின்படி இவ்வாறான செயற்பாடுகளுக்கு பத்து ஆண்டுகால சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியும்.

ஐ.நா.வின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் இவ்வாறான பாலியல் செயற்பாடுகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஐ.நா.வின் ஏனைய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

அதை அமல்படுத்த அரசு சம்மதித்துள்ளதையடுத்து, அதற்கான விதிமுறைகள் குறித்த கலந்தாலோசனைகள் நடைபெறவுள்ளன.

எனினும், இலங்கையில் ஓரினச் சேர்க்கை ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என அண்மையில் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள், ஐ.நா.வின் பரிந்துரைகளை அரசு முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 comments:

  1. This what UN .... They go made and wanted good people too go made...
    Even Animals do not involve in this homosexual action But UN United nonsense Do wanted ... This proves it is works to establish SATAnN desier .....
    May God Protect Good from Bad

    ReplyDelete
  2. பெரும் சுனாமி ஒன்றை எதிர்பாருங்கள்

    ReplyDelete
  3. இறை தண்டனையில் இருந்து இந்த நாட்டை பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் சமய சமூக வேறுபாடுகளை மறந்து இவ்விடயத்தை அனைவரும் எதிர்த்து போராட வேண்டும் .

    ReplyDelete
  4. இதற்குதான் அந்த இயந்திரம் அமைத்துள்ளார்கள் போல்.

    ReplyDelete
  5. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையில் ஒன்று பட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்... அவர்களால் தான் இவ்வாறான சமூக விரோத செயல்களுக்கு எதிராக போராட முடியும்.. ஏனையோர் இதனை சகவாழ்வு என்றும் இது இஸ்லாமிய நாடு இல்லை என்றும் காரணங்கள் சொல்லுவார்கள்...

    ReplyDelete
    Replies
    1. முதலில் உம் ஜமாத்தின் சீர்கேடுகளை திருத்த ஒன்று படுவீராக. தன்னைத்திருத்து உலகம் திருந்தும்.

      Delete
    2. இந்த ஜமாத்தின் சீர்கேடு என்ன என்று தெளிவாக கூறுங்கள்.. கப்ரு வணங்குவதும், கத்தம் ஓதுவதும் தான் உங்களின் நேர் வழியா?

      Delete
  6. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையில் ஒன்று பட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்... அவர்களால் தான் இவ்வாறான சமூக விரோத செயல்களுக்கு எதிராக போராட முடியும்.. ஏனையோர் இதனை சகவாழ்வு என்றும் இது இஸ்லாமிய நாடு இல்லை என்றும் காரணங்கள் சொல்லுவார்கள்...

    ReplyDelete
  7. ஆட்சியில் இருப்பவர்கள் இந்த செயலில் இருப்பவர்கள் என்று கூறினால் பிழை இல்லை என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  8. இந்த ஆட்சியில் அவர்களின் ஒவ்வொரு திட்டத்துக்கும் சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத்தான் முன்னைய ஆட்சியை நம்மைக் கொண்டே காய்நகர்த்தல் செய்து மாற்றி இருக்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.