Header Ads



ஒரு இந்து சகோதரனின், மனம் திறந்த பதிவு

யார் இந்த துலுக்கன்?

நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே ” டேய் துலுக்க பையா ” என்றுதான் அழைக்கிறோம்.
.
துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம்.
.
இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.
.
எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும்.
.
என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை.
.
அப்படி யாராவது ஒரு சிலர் கடைபிடித்துவிட்டால் ” அப்பா , அவர் ரொம்ப நேர்மையானவர்பா “, என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.
.
அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
.
தாழ்த்தப்பட்ட , மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள்
.
மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
.
அவர்களுக்கு வீடு வாடைகைக்குகூட நம்மில் யாரும் கொடுப்பதில்லை. கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம்.
.
அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்ல. மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள்.
.
அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க முடியாது.
.
அடுத்தது தீவிரவாதம்.
.
தீவிரவாதம் எங்கு தான் இல்லை?
.
ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.
.
பா.ம.க எப்படி வளர்ந்தது?
.
வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?
.

மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ?
.
தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்?
.
விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ?
.
இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா?
.
எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும் ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம்.
.
இவர்கள் மட்டும் யார்?
.
சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான்.
.
இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது.
.
நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும், எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும்.
.
என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள்.
.
சகோதரத்துவத்தையே அவர்கள் விரும்புகிறார்கள்.
.
ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக கொண்டு இருந்தபோது துருக்கியன் என்று அழைக்கபட்டர்கள்.
.
அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது.
.
இது ஒன்றும் கேலிக்குரிய வார்த்தை அல்ல..
.
மகாகவி பாரதிகூட தன்னுடைய படைப்புக்களில் “திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்”, என்று குறிப்பிட்டுள்ளார். (அவர், மூஸ்லிமகளின் தொழுகை நியதிகளை அறிந்திராத நிலையில் கூறியது)
.
ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம். 60 ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்கை. மிக சிறிய வாழ்கை. ஒரு ஆமைகூட 400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூட நமக்கு கிடையாது.
.
இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம்.
ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள். அப்புறம் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும் .
-புவன் கிருஷ்ணன்.

1 comment:

  1. Well said and let us be role model Islamian in our day today life, That is more than enough to convey message of Islam to the world.

    ReplyDelete

Powered by Blogger.