Header Ads



மது­ரங்­குளி பஸ் விபத்தில், மர­ணித்­தோரின் விப­ரங்கள்

புத்­தளம் மது­ரங்­குளிப் பகு­தியில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை காலை இடம்­பெற்ற பஸ் விபத்தில் உயி­ரி­ழந்த ஏழு பேரி­னதும் பெயர் விப­ரங்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இவர்­களுள் ஒருவர் இந்­தியப் பிரஜை என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

இவ்­வி­பத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் விப­ரங்கள் பின்­வ­ரு­மாறு: கத்­தளாய், தம்­ப­ல­காமம், சிராஜ் நகரைச் சேர்ந்த சஹீர் முஹம்மட் உஸாமா ( வயது 23), தங்­கொ­டுவ கட்­டு­நே­ரிய தெற்கு பகு­தியைச் சேர்ந்த திஸா­நா­யக்க என்டன் திலீப் தர்­ஷன (வயது 33), ஹம்­பாந்­தோட்டை, சுனாமி வீட­மைப்புத் திட்­டத்தில் வசிக்கும் முஹம்மட் இஸ்­மாயில் பாத்­திமா சஜீதா (வயது 19), ரக்­கு­வான, பட்­ட­லந்­தயைச் சேர்ந்த முஹம்மட் ஹனீபா முஹம்மட் இம்­ரான்கான் (வயது 23), வெல்­லம்­பிட்டி, கனத்தை வீதியைச் சேர்ந்த சம­ர­சிங்க ஆராச்­சி­லாகே ரஞ்­சனி மெராயா (வயது 64), வெல்­லம்­பிட்டி, கனத்தை வீதியைச் சேர்ந்த பெதும் பிர­தீபா நாராயன், இந்­தியா சுபானி நகரைச் சேர்ந்த ஆறு­முகம் பாண்டி ஆகி­யோரே இவ்­வி­பத்தில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இவ் விபத்தில் படு­கா­ய­ம­டைந்த இந்­திய பிர­ஜை­யான ஆறு­முகம் பாண்டி என அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நபர் மேல­திக சிகிச்­சைக்­காக புத்­தளம் தள வைத்­தி­ய­சா­லையில் இருந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட நிலையில், அவர் அங்கு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார். 

இந்­திய பிர­ஜையின் சடலம் தொடர்பில் இந்­திய தூத­ர­கத்­திற்கு  தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன், குறித்த சடலம் தொடர்பில் மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும் அனு­மதி கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் புத்­தளம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே.ஏ.சந்­தி­ர­சேன தெரி­வித்தார்.

குறித்த இந்­திய பிரஜை புடவை வியா­பார நோக்­கத்­திற்­காக இலங்கை வந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிப்­ப­தா­கவும் புத்­தளம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே.ஏ.சந்­தி­ர­சேன கூறினார்.

அத்­துடன், குறித்த விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களில் இரண்டு பேரின் சட­லங்கள் திங்­கட்­கி­ழமை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­துடன், ஏனை­ய­வர்­க­ளது சட­லங்கள் இன்று (நேற்று) உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

திங்­கட்­கி­ழமை அதி­காலை கொழும்­பி­லி­ருந்து புத்­தளம் மார்க்கம் ஊடாக யாழ்ப்­பாணம் நோக்கிப் பய­ணித்த தனியார் பஸ், பிர­தான வீதியில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த முச்­சக்­கர வண்­டி­யொன்றை முந்திச் செல்ல முற்­பட்ட போது வேகக் கட்­டுப்­பாட்டை இழந்த குறித்த பஸ், வீதியை விட்டு விலகி வீதி­யோ­ரத்தில் உள்ள பாலத்தை உடைத்­துக்­கொண்டு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் இந்திய பிரஜை உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 42 பேர் புத்தளம், முந்தல், சிலாபம் மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments

Powered by Blogger.