Header Ads



'மாணவர்கள் கற்பதற்குரிய இடங்களாக, பள்ளிவாயல்கள் பயன்படுத்தப்பட வேண்டும்'


-எம்.ரீ. ஹைதர் அலி-

எமது சமூகத்திலுள்ள ஆண் மாணவர்களின் கல்வி நிலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் எமது பிரதேசத்திலுள்ள அதிகமான வீடுகள் மாணவர்கள் கல்வி கற்பதற்கான பொருத்தமற்ற சூழலுடையதாகவே அமைந்துள்ளது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.  

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி ப்ளக் பேர்ல் விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 2017.11.15ஆந்திகதி இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 

அதேவேளை தனியார் இடங்களை பெற்று மாணவர்கள் தமது நண்பர்களுடன் சேர்ந்து கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் பட்சத்தில் அந்த சூழல் மாணவர்களை தவறான செயல்களின் பக்கம் கொண்டு செல்லக்கூடியதொரு அச்சுறுத்தலும் காணப்படுகின்றது. 

எனவே பள்ளிவாயல்களில் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் பட்சத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்குரிய பொருத்தமான சூழலாக பள்ளிவாயல்களை பயன்படுத்த முடியும்.

ஆகவே இவ்வாறான விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துவது தொடர்பான மேலதிக செயற்பாடுகளிலும் இத்தகைய விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட இளைஞர் அமைப்புகள் கவனம் செலுத்தி செயற்படுவதனூடாக எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியினை முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற முன்வர வேண்மெனவும் தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.