Header Ads



ஐ.நா குழு அடுத்தவாரம், கொழும்பு வருகிறது - முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும்

தன்னிச்சையான தடுத்து வைப்புகள் தொடர்பான, ஐ.நா பணிக்குழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவின் மூன்று உறுப்பினர்கள், சிறிலங்காவில் எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

ஜோஸ் அன்ரனியோ குவேரா பேர்முடாஸ், லேஹ் ரூமி, எலினா ஸ்டரெய்னேர்ட் ஆகியோரே சிறிலங்கா வரவுள்ளனர்.

இவர்கள், சிறைச்சாலைகள், காவல்நிலையங்கள், போன்ற தடுப்பு மையங்கள், இளைஞர் நிறுவகங்கள், புலம்பெயர் மற்றும் உளவியல் குறைபாடுள்ளவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

கொழும்பு வரும் இந்தக் குழுவினர், மேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு, தென், மத்திய மாகாணங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்க, சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்காளர்களையும் ஐ.நா பணிக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

இவர்கள் தமது பயணத்தின் போது மேற்கொண்ட மதிப்பீடுகள் குறித்து வெளிப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை டிசெம்பர்15ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடத்தவுள்ளனர்.

சிறிலங்கா பயணம் குறித்த இந்தக் குழுவின் இறுதி அறிக்கை, 2018 செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.