Header Ads



போலி வட்ஸப் குறித்து எச்சரிக்கை

பிரபல செய்தி பரிமாற செயலியான வாட்ஸ்- அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உலவும் தகவல் வெளியாகியுள்ளது

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் ஒரு அங்கமாக இருப்பது வாட்ஸ்-அப். இது உலகமெங்கும் அதிகமான பேரால் பயன்படுத்தப்படும் ஒரு செய்தி பரிமாற்ற செயலியாகும். நமக்கு உதவக்கூடிய செயலிகளை தரவிறக்கி பயன்படுத்த உதவும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுகிடைக்கிறது.

ஆனால் தற்பொழுது வாட்ஸ்- அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உலவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. “Update WhatsApp Messenger” என்ற பெயரில் அங்கு கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேரினை உருவாக்கியவர்கள் ‘WhatsApp Inc*’ என்று என்பவர்களின் பெயர் காணப்படுகிறது. இந்த ஆஃப்பானது இதுவரை 5000 பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த பெயரில் வேறொரு அப்ளிகேஷனும் உள்ளது. அது இதுவரை 10 லட்சம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இதுவரை 1 பில்லியன் மக்கள் தரவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தகவல்களை எல்லாம் வாட்ஸ் அப்பில் நிகழும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் WABetaInfo என்னும் இணையத்தளமானது தன்னுடைய டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.