Header Ads



"அமீன் அருங்காவியம்" கவிதை நூல் வெளியீட்டு விழா - இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பிரதம அதிதி

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் பற்றி கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழுதியுள்ள ‘அமீன் அருங்காவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 07, ஆனந்த குமாரஸ்வாமி மாவத்தை, புதிய நகர மண்டப கேட்பார் கூடத்தில் நடைபெறும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி மற்றும் அஸீஸ் மன்றம் இணைந்து நடத்தும் இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் இந்திய லோக் சபையின் முன்னாள் உறுப்பினருமான முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பிரதம அதிதியாக கலந்தகொள்வார். 

கௌரவ அதிதிகளாக நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்ர் ரவூப் ஹக்கீம் கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாத் பதியூதீன் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மாகாண சபைகள் மற்றும் உள்ள+ராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தபால் தபால் சேவைகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

சிறப்பு அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மானில சிரேஷ்ட உப தலைவர் எம்.அப்துல் றஹ்மான் அஸீஸ் மன்ற தலைவர் அஷ்ரப் அஸீஸ் ஆகியோரும் தென்னிந்தியாவிலிருந்து மதிமுகம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அஹமட் "பீயான் மணிச்சசுடர் ஊடகவியலாளர் சாஹ_ல் ஹமீத் ஆகியோர் கலந்துகொள்வர். 

காவியாபிமானி கலைவாதி கலீல் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுகொள்ளவுள்ளதோடு நூல் ஆசூவினை காப்பிய@கா டாக்டர். ஜின்னா சரீப்தீன் நிகழ்த்தவுள்ளார்.

No comments

Powered by Blogger.